இந்தியாவில் அதிக முதலீடு: ஐரோப்பிய யூனியன் முடிவு!

இந்தியாவில் அதிக முதலீடு: ஐரோப்பிய யூனியன் முடிவு!

Share it if you like it

வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யப்படும் என்று பிரான்ஸ் நாட்டு தூதர் தெரிவித்திருக்கிறார்.

அண்டை நாடான சீனா, ‘பெல்ட் அண்டு ரோடு’ திட்டத்தின் மூலம் பல நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. அதாவது, உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், தனது ஆதிக்கத்தையும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதற்குப் போட்டியாக, 27 ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியன், கடந்தாண்டு இறுதியில் புதிய திட்டத்தை அறிவித்தது. ‘குளோபல் கேட்வே’ என்கிற இத்திட்டத்தில், 24 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், பல நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்த, அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் துாதர் இமானுவேல் லீனாயின் கூறுகையில், “இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவு எப்போதும் சிறப்பாகவே இருக்கிறது. இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை, ஒரு போட்டியாகவே எடுத்துக் கொள்கிறோம். அதேசமயம், இந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பான இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம். ஐரோப்பிய யூனியனின் குளோபல் கேட்கே திட்டத்தின் மூலம், பல நாடுகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அதிக திட்டம் இருக்கும். குறிப்பாக, மிகப் பெரிய அளவுக்கான முதலீடுகள் இந்தியாவில் செய்யப்படும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it