பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்றைய போக்குவரத்துத் துறை !

பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்றைய போக்குவரத்துத் துறை !

Share it if you like it

சென்னையில் உள்ள திருவேற்காடில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் 59), அமைந்தகரை பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் திடீரென பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்திற்குள்ளாகியது.

உடைந்த இருக்கையில் பெண்மணி ஒருவர் இருக்க, அவர் சறுக்கி தொங்கியபடி அலறி இருக்கிறார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், காயமடைந்த பெண்மணி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நல்வாய்ப்பாக பேருந்து நிறுத்தப்பட்ட காரணத்தால் பெண்மணி காயத்துடன் உயிர்தப்பினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சென்னை திருவேற்காட்டில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரி ஒருவர், இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு நிர்வாகம் என்ன நிலைமையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சரியாகப் பராமரிக்கப்படாத பேருந்துகளால், மழைக் காலங்களில் பேருந்திற்குள் தண்ணீர் ஒழுகுவது, பழுதடைந்த இருக்கைகள் என, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று போக்குவரத்துத் துறை முற்றிலுமாகச் செயலிழந்து இருக்கிறது.

போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழக அரசுத் துறைகளும் இதைப் போன்ற பரிதாப நிலையில்தான் இருக்கின்றன. மக்களின் வரிப்பணம் முழுவதும் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

போக்குவரத்துத் துறையில் என்னென்ன விதங்களில் ஊழல் செய்யலாம் என்று சிந்திக்கும் அமைச்சர், அரசுப் பேருந்துகளைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it