இ.வி.எம். விஞ்ஞானிகள் எங்கே? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இ.வி.எம். விஞ்ஞானிகள் எங்கே? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

இப்போது எங்கே போனார்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி விஞ்ஞானிகள் என்று உ.பி.ஸ்களை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும்போதும், இந்தியாவில் நடக்கும் எந்த மாநிலத் தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்றாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தி்ல் மோசடி செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூக்குரலிடும். இதில் வேடிக்கை என்னவென்றால், பிற மாநிலத் தேர்தலுக்கு சம்மந்தமே இல்லாத தமிழகத்தில் இருந்து, அந்நிய கைக்கூலிகள், டுபாக்கூர் போராளிகள், 200 ரூபாய் உ.பிஸ்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதுதான். வெளி மாநிலங்களில் நடக்கும் தேர்தலுக்கே இப்படி கூப்பாடு போட்டால், தமிழகத்தில் நடக்கும் தேர்தலுக்கு கேட்கவா வேண்டும்.

இப்படித்தான் 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பா.ஜ.க.வோடு ரகசியமாக கைகோர்த்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துவிட்டதாக குய்யோமுறையோ என்று கூச்சலிட்டார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், சில விஞ்ஞானிகள்(!?) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்று டெமோ செய்தெல்லாம் காட்டினார்கள். இதையும் மக்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்ததுதான் பரிதாபம்.

அதேசமயம், 2019-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலும், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி குறித்து யாருமே வாய்திறக்கவில்லை. மாறாக, தங்களது கோஷத்தை அப்படியே உல்டாவாக மாற்றினார்கள். அதாவது, ‘இது பெரியார் பூமி. தமிழர் மண். இங்கு பா.ஜ.க.வின் தில்லாலங்கடி வேலையெல்லாம் நடக்காது’ என்று கூறிவந்தனர். அதேபோல, தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இப்போதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி குறித்து யாருமே வாய்திறக்கவில்லை. ஆகவே, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி குறித்து பேசும் விஞ்ஞானிகளை தற்போது காணோமே என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Share it if you like it