தமிழ் மொழியை சனியன் என்று திட்டியவர் ஈ.வெ.ரா: பிரபல எழுத்தாளர் வெளியிட்ட ஆதாரம்!

தமிழ் மொழியை சனியன் என்று திட்டியவர் ஈ.வெ.ரா: பிரபல எழுத்தாளர் வெளியிட்ட ஆதாரம்!

Share it if you like it

தமிழ் மொழியை சனியன் என்று திட்டியவர் ஈ.வெ.ரா என பிரபல எழுத்தாளர் பிரபாகர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி மொழியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அந்தந்த மாநில மொழிகளை தவிர்த்து விட்டு ஹிந்தி மொழியை தான் பேச வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கவில்லை. மக்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஆங்கிலத்திற்கு பதில், ஹிந்தி மொழியில் பேசலாம் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து இதுதான் நிதர்சனமான உண்மை.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஹிந்தி முதன்மையான இடத்தில் உள்ளது. அந்தவகையில், இந்திய மொழிகளில் ஒன்றான ஹிந்தி மொழியை பயன்படுத்தலாம் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதில், எந்த தவறும் இல்லை என்பதே பலரின் கருத்து.

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று வரை தி.மு.க திணறி வருகிறது. மத்திய அமைச்சரின் கருத்தை வழக்கம் போல திரித்து ஹிந்தி மொழி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று தி.மு.க மற்றும் கழக கண்மணிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதற்கு, வலுசேர்க்கும் விதமாக தி.மு.க.வின் அடிமை ஊடகங்கள் விவாதங்கள் என்கின்ற பெயரில் தமிழக மக்களின் கவனத்தை மத்திய அரசின் பக்கம் திருப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், பிரபல ஊடகமான ராஜ் டிவி.யில் ஹிந்து மொழி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நடைபெற்ற விவாதத்தில் ஈ.வெ.ரா குறித்து பேச்சு எழுந்தது. அப்பொழுது, பேசிய பிரபல எழுத்தாளர் பிரபாகர் தமிழ் மொழியை சனியன் என ஈ.வெ.ரா திட்டினார் என ஆதாரத்துடன் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தமிழ் ஒரு காட்டுமிரண்டி மொழி, தமிழ் ஒழிந்தால் என்ன நட்டம், தொல்காப்பியன் ஆரியக்கூலி, திருக்குறள் ஒரு மலம், வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொன்ன ஈ.வெ.ரா.வின் கருத்திற்கு இதுவரை கண்டனம் இல்லை. ஆனால், அமித்ஷா.,வின் கருத்திற்கு மட்டும் உடனே தி.மு.க.வினர் பொங்கி இருப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபத்தை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it