Share it if you like it
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தானிற்கு திரும்பி வந்திருக்கிறார். பெரும் உள்நாட்டு குழப்பம் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு அதன் முன்னாள் பிரதமர் திரும்பி வந்திருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திரும்பி வந்த நவாஸ் ஷெரீப் நமக்கு ஒரு நாள் தாமதமாக சுதந்திரம் அடைந்த இந்தியா நிலவில் கொடி நாட்டி ஜி 20 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து உலகில் யாரும் வெல்ல முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது . ஆனால் நாமோ இன்னமும் உலக நாடுகளிடம் கடன் உதவி – இலவச உதவி என்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலிருந்து பாகிஸ்தான் மீண்டு வரவேண்டும் என்று பேசியது பாகிஸ்தான் அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பேசும் பொருளாகி இருக்கிறது.
Share it if you like it