பொய் செய்தி பதிவிட்ட வீரமணி – வெறும் முரசொலி மட்டும் படித்தால் இப்படி தான்..!

பொய் செய்தி பதிவிட்ட வீரமணி – வெறும் முரசொலி மட்டும் படித்தால் இப்படி தான்..!

Share it if you like it

எந்த விவகாரமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டிவிட்டு அரசியல் செய்வதில் திகவினரை அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் நாடே ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையிலும் கூட மலிவு அரசியல் செய்வதை திகவினர் விடவில்லை. இவற்றை எல்லாம் கண்டிக்க வேண்டிய திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர் பங்குக்கு தானும் ஒரு பொய் செய்தியை வெளியீட்டு லீவு அரசியல் செய்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி கடந்த மே 14 ம் தேதி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில்

“கோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்?
35 ஆயிரம் கோடி ரூபாயில் நாடாளுமன்றம் கட்டுவதைத் தவிர்த்து, கரோனா ஒழிப்பிற்குப் பயன்படுத்துக!
தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்களே தாராளமாக வாரி வழங்கி உதவிக்கரம் நீட்டுவீர்”

blank

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு வெறும் 970 கோடி தான் ஆகும் என அரசு முதற்கொண்டு அனைத்து ஊடகமும் செய்தி சொல்லிவிட்ட பொழுதும் இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it