பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது, பழிவாங்கும் நடவடிக்கை என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு..!

பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது, பழிவாங்கும் நடவடிக்கை என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு..!

Share it if you like it

பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸை கைது செய்த தமிழக காவல்துறை.

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் மற்றும் நடிகையுமான காயத்திரி ரகுராம் அவர்கள் தி.மு.க-வின் நிர்வாகி ஜெயசந்திரன் என்பவன் தம்மை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து அவமதித்து உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்து இருந்தார். விமர்சனம் செய்தவர் தி.மு..க கட்சியை சேர்ந்த நிர்வாகி என்பதால் அவர் மீது இன்று வரை காவல்துறை எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

பிரபல ஊடகமான நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதம் ஒன்றினை நடத்தியது. அந்த விவாதத்தில் வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு கலந்து கொண்டு பேசும் பொழுது, பாரதப் பிரதமர் மோடி அவர்களை கொலைக்கார் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகள் உட்பட பலர் வன்னியரசை உடனே கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர். தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க அச்சப்படுவதாக பலர் அந்நாட்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

ஆளும் கட்சி செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி பேசி வரும் பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் அவர்களை தமிழக காவல்துறையினர் இன்று அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று கைது செய்து உள்ளனர். வன்னியரசு, ஜெயசந்திரன், மீது புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனம் காக்கும் காவல்துறையினர். மாரிதாஸ் மீது உடனே நடவடிக்கை எடுத்து இருப்பதன் மூலம் தி.மு.க தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை வேகப்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it