தமிழக முதல்வரை புகழ்ந்து கவிதை வடித்த பிரபல Metoo வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

தமிழக முதல்வரை புகழ்ந்து கவிதை வடித்த பிரபல Metoo வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் என்று ’ஆர்மாக்ஸ் மீடியா’ கணித்ததாக அண்மையில்  செய்தி வெளியாகியது, இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் கழக கண்மணிகள் தி.மு.கவின் சாதனை இது தான் என்று தொடர்ந்து  தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க-வில் தீவிர ஆதரவாளரும் Metoo புகழ் என்று அனைவராலும் அழைக்கப்படும் வைரமுத்து அவர்கள் உண்மை தன்மையை ஆராயாமல் தி.மு.க தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து கவிதை வடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவின் முதலமைச்சர்களில் ’முதல்’அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ஆர்மாக்ஸ் மீடியா கணித்திருப்பது அவர்தம் ஆட்சித் திறத்திற்கு சாட்சியாகும். முதலமைச்சர் பெருமை சேர்ப்பது தமிழ்நாட்டுக்கு; இந்தியா பெருமை சேர்ப்பது முதலமைச்சருக்கு. தக்கவரின் மிக்க புகழைத் தக்கவைக்க வாழ்த்துகிறேன்.

”ஆர்மாக்ஸ் மீடியா என்னும் நிறுவனம் இதுபோன்ற பல கருத்து கணிப்பை நடத்தி வருவது வழக்கம். வாரந்தோறும் சுமார் 1,600 நபர்களிடம் தொலைபேசியின் மூலம் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it