திமுக வேட்பாளருக்கு கறுப்புக்கொடி காட்டி துரத்திவிட்ட விவசாயிகள் !

திமுக வேட்பாளருக்கு கறுப்புக்கொடி காட்டி துரத்திவிட்ட விவசாயிகள் !

Share it if you like it

தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு கறுப்புக்கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை அடுத்து தாராபுரத்தில் அமைந்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து உபரி நீரை அரசூர் சட்டவழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தண்ணீர் திறந்து விடக்கோரி பாசன விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்களிடம் 7 முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட இந்த பாசன விவசாயிகளிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகள், கடைகள், தோட்டங்களில் கறுப்புக்கொடி கட்டியும் வராதே வராதே ஓட்டு கேட்டு ஊருக்குள் வராதே ! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும்போது வராதவர்கள் இன்று உங்கள் தேவைக்கு மட்டும் ஓட்டு கேட்டு வராதே என்று பேனர் கட்டியும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சார வாகனத்தில் வந்திருந்தார். ஏற்கனவே தண்ணீர் கிடைக்காமல் கோபத்துடன் இருக்கும் மக்கள் தங்களின் கோவத்தை முழுவதும் அவர் மேல் கொட்டினர். திமுக வேட்பாளரை பேச விடாமல் மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்த பிரகாஷ் தனது பிரச்சாரத்தை சிறிது நேரத்திலேயே முடித்துக்கொண்டு கிளம்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it