பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிய ஃபரூக் அப்துல்லா : இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலே இருக்காது – பொளந்து கட்டிய நெட்டிசன்ஸ்

பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிய ஃபரூக் அப்துல்லா : இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலே இருக்காது – பொளந்து கட்டிய நெட்டிசன்ஸ்

Share it if you like it

ஃபாரூக் அப்துல்லாவின் பூச்சாண்டி காட்டுகின்ற வேலையெல்லாம் இப்போது நடக்கின்ற நரேந்திர மோடி ஆட்சியில் எடுபடாது என்று இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

பருக் அப்துல்லா முதற்கொண்டு இண்டியா கூட்டணியில் உள்ள அனைவருமே எப்போதும் பாகிஸ்தானுக்கு வால் பிடிப்பதே முழு நேர தொழிலாக செய்து கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருந்தால் இந்தியா தீபாவளி பட்டாசு வைத்திருக்கவில்லை என பிரதமர் கூறினார். பாகிஸ்தானின் கைக்கூலியான ஃபாரூக் அப்துல்லாவிற்கு வயதாகி விட்டதால் ஞாபகம் மறதி அதிகம். பாகிஸ்தானை இரண்டு துண்டாக்கி கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தது இந்திய ராணுவம்

. பாகிஸ்தான் உடனான போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை பலமுறை மண்டியிட செய்துள்ளது. அது கார்கில் போராக இருந்தாலும் சரி 1971 இல் இந்தியா பாகிஸ்தான் போராக இருந்தாலும் சரி பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தது இந்தியா ராணுவம்.

ஃபாரூக் அப்துல்லாவின் பூச்சாண்டி காட்டுகின்ற வேலையெல்லாம் இப்போது நடக்கின்ற நரேந்திர மோடி ஆட்சியில் எடுபடாது.

இந்தியா மீது அணு ஆயுத பிரயோகம் நடத்த பாகிஸ்தான் நினைத்தாலே பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் செய்யும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளது என்பதையும் இந்திய ராணுவத்தின் கைகளில் பூ வைத்திருக்கவில்லை என்பதையும் பாகிஸ்தானின் அடிவருடியான பருக் அப்துல்லா நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

பரூக் அப்துல்லா பற்றி சில : –

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், “கவலைப்படாதீர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) நம்முடையது. அது நம்முடனே இருக்கும். இந்தியாவின் சக்தி அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரமும் வேகமாக முன்னேறி வருகிறது. அதோடு, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. PoK-ல் உள்ள நமது சகோதர சகோதரிகள் தற்போது தாங்களாகவே இந்தியாவுடன் சேர்வதாக கோருவார்கள்” என்று உரையாற்றினார்.

அதேபோல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கட்டாக்கில் , “PoK நம் நாட்டை விட்டுப் பிரிந்ததில்லை. PoK இந்தியாவின் ஒரு பகுதி என்று இந்திய நாடாளுமன்றத்தின் தீர்மானம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர்களின் இத்தகைய கூற்றுக்கு எதிர்வினையாற்றிய ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, “பாதுகாப்புத்துறை அமைச்சர் அவ்வாறு சொல்கிறாரென்றால் அவர் அதைச் செய்யட்டுமே… நாங்கள் யார் தடுக்கிறோம். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பாகிஸ்தானும் கையில் வளையல் அணிந்திருக்கவில்லை… அணுகுண்டு வைத்திருக்கிறார்கள். அது நம் மீதும் விழக்கூடும்” என்றார். இவ்வாறு இந்தியாவில் சகல உரிமைகளையும் அனுபவித்து கொண்டு பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்க வெட்கமாக இல்லையா ? பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதாக இருந்தால் எதற்காக இந்தியாவில் வாழ்கிறாய் ? பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியது தானே ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஃபரூக் அப்துல்லாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *