சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வரும் #கொழுப்பு_ திருடன்_மனோ !

சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வரும் #கொழுப்பு_ திருடன்_மனோ !

Share it if you like it

தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை வரும் நவம்பர் 25-ம் தேதியோடு நிறுத்திக்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், அதற்கு பதிலாக பச்சை நிற பாக்கெட் பாலைவிட 1% கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்திருக்கும் விளக்கம், சர்ச்சையையும் சந்தேகத்தையும் கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச்சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்புச்சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே 6% கொழுப்புச்சத்து இருக்கவேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச்சத்தே இருப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், பா.ஜ.க மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச்சத்துக்களைக் குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. மேலும், பாலில் கொழுப்புச்சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்துவருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்குத் தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், பேசிய திமுக அமைச்சர் மனோதங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பேசுவது தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தான் ஒரு பரம முட்டாள் என்பதை அண்ணாமலை நிரூபித்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திரு மனோதங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். .

நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் சமூக வலைத்தளமான x ல் #கொழுப்பு திருடன் மனோ என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.


Share it if you like it