டாடி டாடி… ஓ மை டாடி… வைரலாகும் போட்டோ!

டாடி டாடி… ஓ மை டாடி… வைரலாகும் போட்டோ!

Share it if you like it

ஓடும் ரயிலில் அப்பாவும், மகனும் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். குறிப்பாக, ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்ப்பது, இரட்டைக் குழந்தைகள் அச்சு அசலாக அடையாளம் காண முடியாதபடி ஒரே மாதிரி இருப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல, தந்தையும், மகனும் ஒரே துறையில் வேலை பார்ப்பது, அண்ணன், தம்பிகள் ஒரே துறையில் வேலை பார்ப்பது போன்றவையும் நம்மை வியக்க வைக்கும். அந்த வகையில், தந்தையும், மகனும் ஒரே துறையில் வேலை பார்ப்பதோடு, வியக்கத்தக்க ஒரு செல்பியையும் எடுத்து போஸ்ட் செய்திருப்பதுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இது எந்த மாநிலத்தில் அல்லது எந்த நாட்டில் நடந்தது என்பது தெரியவில்லை. அதேசமயம், ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ரயிலின் வண்ணத்தை வைத்துப் பார்க்கும்போது வங்கதேசமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதாவது, தந்தை ரயில்வே துறையில் பணிபுரிந்துவரும் நிலையில், மகனும் அதே துறையில் சேர்ந்திருப்பதுதான் ஆச்சரியம். தந்தை ரயில்வே கார்டாக (ரயில் மேலாளர்) பணிபுரிந்து வந்திருக்கிறார். இதைப் பார்த்த மகனுக்கு ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்றும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, படித்து ரயில்வே துறை தேர்வை எழுதி இருக்கிறார். இதில் அவருக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைத்திருக்கிறது. இதனால், தந்தைக்கும் மகனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. ஆகவே, இருவரும் பணியின்போது செல்பி எடுக்க வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள். ஆனால், தந்தை வேலை செய்வது வேறு இடத்தில், மகன் வேலை செய்வது மற்றொறு இடத்தில். அப்போதுதான் மகனுக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. அதாவது, இருவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும், இருவர் பணிபுரியும் ரயில்களும் எதிரெதிர் துருவங்களில் பயணிக்கும்போது ஒரு இடத்தில் சந்திக்கும்தானே? அந்த இடத்தில் செல்பி எடுத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தனர். ஆனால், அதற்கான வாய்ப்பும் கிடைக்காததால் அவர்களது ஆசை நிறைவேறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான், இருவரது ரயில்களும் இரு வேறு துருவங்களை நோக்கி செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை தந்தையும், மகனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து, இருவரும் தங்களது ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை செல்போன் மூலம் பகிர்ந்து கொண்டே வந்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் இரு ரயில்களும் அருகருகே சென்றன. அப்போது, மகன் தனது கோச்சிலிருந்து எட்டிப் பார்க்க, தந்தை அவரது கோச்சிலிருந்து எட்டிப் பார்க்க மகன் தனது செல்போனில் செல்ஃபியை கிளிக்கி விட்டார். இந்த செல்ஃபிதான் தற்போது இணைய உலகத்தில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த செல்ஃபியை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர், “அற்புதமான செல்ஃபி. இரண்டு ரயில்களும் அருகருகே கடக்கும்போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டிருக்கிறது” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், சமூக ஊடக பிரியர்களும், தந்தை மகனின் இந்த அழகான தருணத்தை கண்டு வியந்து கமென்ட் செய்து வருகிறார்கள்.


Share it if you like it