தமிழகம் நம்பர் 1… அட, அதிக கடன் வாங்குனதாம்ங்க..!

தமிழகம் நம்பர் 1… அட, அதிக கடன் வாங்குனதாம்ங்க..!

Share it if you like it

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று நடந்த அவை நடவடிக்கையின்போது, தெலுங்கானா எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்… “இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கி உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்திருப்பதாகக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பை வெளியிட்டு நிர்மலா சீதாராமன், மார்ச் மாதம் வரை தமிழகத்தின் மொத்த கடன் தொகை சுமார் 7,53,860 கோடி” என்றார்.

மேலும், இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் 2-வது இடத்தை உத்தரப் பிரதேசமும், 3-வது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்திருக்கின்றன என்றார். அதோடு, 164-வது வருமான வரி தின கொண்டாட்டத்தை ஒட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it