பொதுக்குழு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய நிதியமைச்சர் : தமிழில் பேச சொன்ன பிரதமர் மோடி !

பொதுக்குழு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய நிதியமைச்சர் : தமிழில் பேச சொன்ன பிரதமர் மோடி !

Share it if you like it

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், என் வீட்டைப் பற்றிச் சிந்தித்து இருந்தால், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க முடியாது. நான் ஒன்றும் அதிகாரத்தை கொண்டாடுவதற்காக மூன்றாவது முறையாக வாய்ப்பு கேட்கவில்லை. வரும் காலங்களில் ஏழைக் குழந்தைகளே இருக்கக் கூடாது என்பதற்கான உறுதியோடு வாழ்கிறேன். என்னுடைய கனவுகள் எல்லாம், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்தே செயல்படுகிறது. இவ்வாறு பேசினார்.

அதன் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். அவர் பேச தொடங்கும்போது ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தியில் பேசினார். உடனடியாக குறுக்கிட்ட பிரதமர் மோடி நிர்மலா ஜி அவர்களே தாங்கள் ஹிந்தியில் பேசியதில் மகிழ்ச்சி, தங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை, தாங்கள் கூறியதை ஒரு முறை தமிழிலும், தெலுகிலும் கூறுங்கள் என்று சொன்னார். இதனை தொடர்ந்து தன்னுடைய உரையை தமிழில் பேசினார். இந்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழை பற்றியும் அதன் பெருமையை பற்றியும் பேசாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it