நொந்து போன காங்கிரஸ்: வேல் பாய்ச்சிய திரிணாமுல் காங்கிரஸ்!

நொந்து போன காங்கிரஸ்: வேல் பாய்ச்சிய திரிணாமுல் காங்கிரஸ்!

Share it if you like it

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்ஹாத் ஹக்கிம். என்பவர் தோல்வியடைந்த காங்கிரஸ் எங்களது கட்சியில் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப் பழமையான கட்சி காங்கிரஸ். தற்பொழுது இக்கட்சி மெல்ல, மெல்ல தனது செல்வாக்கை இந்தியாவில் இழந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, உபி. பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க, 5.க்கு 4. இடங்களில் அமோக வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், பா.ஜ.க-வை சேர்ந்த தொண்டர்கள் நாடு முழுவதும் தங்களது கட்சியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி. அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது தான் நாடு முழுவதும் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.

இப்படியாக, பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்கு மேல் தோல்வியை கண்டு வருகிறது. காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர்களே ராகுல் காந்தியின், திறமையின்மையே தொடர் தோல்விக்கு, காரணம் என குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில்

கொல்கத்தா மேயரும், மேற்கு வங்க மாநில போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், “காங்கிரஸ் போன்ற பழமையான கட்சி ஏன்? மறைந்து வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. நாங்களும் இந்தக் கட்சியில் அங்கம் வகித்தோம். 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தில் படுதோல்வியை காங்கிரஸ் அடைந்து விட்டது. காங்கிரஸை டி.எம்.சி.யுடன் இணைக்க வேண்டும் என்றும். மேலும், மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் அதன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில் அவர் மட்டுமே பா.ஜ.க.வை எதிர்க்கும் திறன் கொண்டவர் என அவர் தெரிவித்து உள்ளார். தற்பொழுது நொந்து போய் உட்கார்ந்து இருக்கும் காங்கிரஸை சீண்டும் விதமாக மம்தா பேனர்ஜி கட்சியை சேர்ந்த அமைச்சர் கருத்து தெரிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it