இந்திய நிறுவனங்களை அழிக்கும் வெளிநாட்டு சதி?

இந்திய நிறுவனங்களை அழிக்கும் வெளிநாட்டு சதி?

Share it if you like it

கடந்த சில ஆண்டுகளாகவே கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டம் என்பது அதானி, ஸ்டெர்லைட் மற்றும் அணு உலைகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் மற்றும் அணு உலைகளை மூட பெரிய முயற்சியை சிலர் செய்து வருகின்றனர்.

தற்போது உலக நாடுகள் வேகமாக ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ (renewable) உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் சாதனங்களை தயாரிக்க தாமிரம் (copper) அவசியம். ஆனால், இந்தியா துரதிருஷ்டவசமாக energy production-ல் போதுமான தன்னிறைவை பெறவில்லை. காப்பர் உற்பத்தியிலும் தன்னிறைவை அடையவில்லை. இதனால், ஒரே நேரத்தில் மின் உற்பத்தி அதிகரித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொஞ்சம் கவனித்தால் இந்த துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்தான் அதானி, ஸ்டெர்லைட் ஆகும். இது தவிர, அரசாங்கம் அணு உலை மேம்பாட்டிற்காகவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மூன்று அமைப்புகளும் ஒருசேர தங்களது பங்களிப்பை கொடுத்து விட்டால் விரைவில் இந்தியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு, பல்வேறு உபகரணங்கள் தயாரிப்பிலும் தன்னிறைவு அடைய முடியும்.

சரியாக இந்த நேரத்தில்தான் முதலில் கூடங்குளம் அணு உலைக்கு, எதிரான போராட்டம் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சொதப்பினாலும், பிற்பாடு விழித்துக் கொண்ட இந்திய அரசாங்கம் ஒரு வழியாக கூடங்குளம் அணு உலையை காப்பாற்றிக் கொண்டது. ஆனாலும், அந்த அணு உலைக்கு எதிரான மனநிலை இன்னமும் மக்களிடம் உள்ளது.

கூடங்குளத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் குறி வைக்கப்படுகிறது. இந்தியாவின் காப்பர் தேவை ஒரு ஆண்டுக்கு 8 லட்சம் டன். இதில் சரிபாதி 4 லட்சம் டன்கள் உற்பத்தி செய்து கொடுத்த நிறுவனம் ஸ்டெர்லைட். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முறையாக பயன்படுத்தும் கருவிகளை (மின்சாதனங்கள், மின்சார வாகனங்கள்) தயாரிக்க காப்பர் மிகவும் தேவை. இந்தியாவிற்கு உதவ ஸ்டெர்லைட் தனது உற்பத்தியை ஆண்டுக்கு 4 லட்சம் டன்களில் இருந்து 8 லட்சம் டன்களாக உயர்த்த முயற்சி செய்தது. ஒருவேளை இது நடந்திருந்தால் இந்தியா காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கும்.

ஆனால், சுற்றுச்சூழல் போராளிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கிளப்பி, துப்பாக்கிச்சூடு வரை கொண்டு சென்று அந்த ஆலையை மொத்தமாக இழுத்து மூடிவிட்டனர். இதனால், தற்போது இந்தியா காப்பர் உலோகத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அடுத்ததாக. சென்னை எண்ணூர் துறைமுகத்தில், அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதானி குழுமத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். ஒருவேளை இந்த திட்டம் நிறுத்தப்பட்டால், அது இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவை energy தட்டுப்பாட்டால் ஸ்தம்பிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது.

சரியாக இதே நேரத்தில், டெஸ்லா முதலாளி இந்தியாவில் மின்சார கார்களை விற்க விருப்பப்படுகிறார். இந்தியாவில் ஆலைகளை நிறுவி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால்தான் இங்கு கார்களை விற்க முடியும் என்று இந்திய அரசாங்கம் கண்டிப்புடன் சொல்லி விட்டது. ஆனால், இந்தியாவில் கார்களை மட்டுமே விற்போம், தொழிற்சாலை தொடங்கி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாது என்பதில் டெஸ்லா நிறுவனம் பிடிவாதமாக உள்ளது.

இந்த நிலையில்தான், படு ஆச்சரியமாக, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் டெஸ்லா கார்களை தங்கள் மாநிலத்தில் விற்க எலான் மஸ்க் நிறுவனத்துக்கு கோரிக்கை வைக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், இதே மாநிலங்கள்தான் மேலே பார்த்த இந்திய நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டவை. கார் தொழிற்சாலை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வந்த டாடா நிறுவனத்தை துரத்தியடித்த மேற்கு வங்க மம்தா அரசு, தற்போது எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுக்கிறது.

அதேபோல, அதானி நிறுவனத்திற்கு பெரும் சேதம் விளைவித்த பஞ்சாப் மாநிலம் எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுக்கிறது. (இந்தியாவில் 4ஜி இணைய சேவையை குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் ஜியோ நிறுவனத்தின் டவர்கள் இதே பஞ்சாப் மாநிலத்தில்தான் உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் இணையசேவை அமைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருவது தனிக்கதை.)

கூடங்குளம், ஸ்டெர்லைட் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்திலும் அரசியல்வாதிகள் எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இதில் ஒற்றுமை என்னவென்றால், இந்த அனைத்து மாநிலங்களிலுமே கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் முழுமையாக உள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் அனைத்துமே சர்ச் நிர்வாகங்கள் உதவியோடு நிகழ்த்தப்படுகிறது.

இதிலிருந்து என்ன புரிகிறது? உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தன்னிறைவு அடையக் கூடாது. இந்தியாவை தொடர்ந்து ஒரு மார்க்கெட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் போன்ற வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் நினைக்கின்றனர். இதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதை செய்வதற்கு தடைக்கல்லாக இருக்கும் இந்திய நிறுவனங்களை இந்தியர்கள் மூலமாகவே அழிக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது.

இதைச் செய்வதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் துணை போகின்றனர். வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக செயல்படும் போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இது முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில், இந்தியா ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற இலக்கை அடையவே முடியாது. தொடர்ந்து வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு காலனியாகவே இருக்கும். இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்காது. இந்தியர்களே புரிந்துகொள்ளுங்கள்!


Share it if you like it