சமூக வலைத்தளங்களில் பாரதப் பிரதமர் மோடி குறித்தும், இந்தியா குறித்தும் மிக கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைக்க கூடியவர் சி.ஜே.வெர்ல்மேன். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்தவர்கள் இவரின் கருத்திற்கு, அதிக முக்கியத்துவத்தை இன்று வரை வழங்கி வருகின்றனர். பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் ராகுல் காந்தி, தோழர்கள், உடன் பிறப்புகள், வெர்ல்மேன் கருத்திற்கு முட்டு கொடுப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.
இந்நிலையில் வெர்ல்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.
ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் 50 கோடி ஹிந்து தீவிரவாதிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக கற்பனை கூட செய்து பார்க்க பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெர்ல்மேன் உளறல் பேச்சிற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தக்க பதிலடியை இவ்வாறு கொடுத்துள்ளார்.
விளையாட்டில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஒரு நாட்டின் வெற்றியை சகித்து கொள்ள முடியாத கீழ்த்தரமான எண்ணம் கொண்ட இவரது மனநோய் விரைவில் குணம் அடையும் என்று விரும்புகிறேன்.
I’m rooting for New Zealand in the ICC Test Championship Final because imagining 500 million Hindutva extremists being happy, even for a second, makes me miserable 😂
— CJ Werleman (@cjwerleman) June 13, 2021
Whoever wins is fine, but what a sad low and miserable life this man is. The fact that this man is given an opportunity to write in publications speaks poorly of the publications. Get well soon Mr Miserable https://t.co/J5f1gbz9YV
— Venkatesh Prasad (@venkateshprasad) June 13, 2021