மாஜி காவல்துறை உயர் அதிகாரி தமக்கு தொடர் கொலை மிரட்டல் வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர், மீது கடந்த 1991- ஆம் ஆண்டு மே மாதம் 21- தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். இந்த கொடூரமான தாக்குதலில் காவலர்கள், கட்சி தொண்டர்கள், பெண்கள் என சுமார் 18-பேர் உடல் சிதறி பலியாகினர்.
இக்கொடூர தாக்குதலில், இருந்து படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர் (ஓய்வு) காவல்துறை உயர் அதிகாரி அனுசுயா. இவர், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்று வரை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதுதவிர, பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையதள ஊடகங்களுக்கு அவ்வபோது பேட்டியளித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி பேரறிவாளனை கட்டி பிடித்து வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், நளினி, பேரறிவாளன் குறித்தோ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தோ எந்த ஊடகத்திலும் இனி பேச கூடாது. மீறினால் உன்னை கொலை செய்வோம் என மாஜி அதிகாரி அனுசுயாவிற்கு தொடர் கொலை மிரட்டல்கள் இன்டர்நெட் கால் மூலம் வந்துள்ளது. இதையடுத்து, தனது வழக்கறிஞர் குழுவுடன் சென்று அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள் தான் என்று வெளிப்படையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அந்த வகையில், அக்கட்சியை சேர்ந்த தொ(கு)ண்டர்கள் மாஜி அதிகாரிக்கு ஏன்? கொலை மிரட்டல் விடுத்து இருக்க முடியாது என்ற கேள்வி இயற்கையாகவே அனைவருக்கும் எழும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
இதனிடையே, இந்திய தேசிய லீக் கட்சி கட்சியின் தலைவர் தடா ரஹிம், முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா இவீங்க போலீசா ? பொறுக்கியா ? நளினியை அவள் இவள் என்றும் பிரபாகரன் அவர்களை அவன் இவன் என்றும் பேசுகிறார். குற்றவாளியா இருந்தா கூட இப்படி எல்லாம் பேச கூடாது என காவல்துறை இவருக்கு பாடம் நடத்தவில்லையா இவருக்கு… என்று அனுசுயாவை விமர்சனம் செய்யும் வகையில் தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும், மாஜி அதிகாரிக்கு வரும் கொலை மிரட்டல்கள் பின்னணியில் சீமான் மற்றும் தடா ரஹீம் ஏன்? இருக்க கூடாது. அவர்களிடம், காவல்துறை உடனே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.