பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் நமக்கு ஒரு நாள் தாமதமாக சுதந்திரம் பெற்ற பாரதம் சந்திராயன் 3 வெற்றி வெற்றிகரமாக ஜி 20 மாநாடுகள் நடத்தி முடிப்பது உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கும் பொருளாதார வல்லரசு என்று எல்லா துறைகளிலும் உச்சத்தை நோக்கி பயணிக்கிறது. ஆனால் பாகிஸ்தானோ சர்வதேச நிதி அமைப்புகளிடமும் உலக நாடுகளிடமும் கடன் உதவி என்று கையேந்தி நிற்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று காட்டமாக பேசி வேதனையை தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமரு மான நவாஸ் ஷெரீப் ( வயது 73 ) பலமுறை பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்தவர் . பர்வேஸ் முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சி பாகிஸ்தானில் அமலுக்கு வந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தேச துரோக குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர். பிறகு நாட்டை விட்டு வெளியேறும் நிபந்தனையோடு முஷாரப் உடன் ரகசிய உடன்படிக்கை மேற்கொண்டதன் மூலம் மரண தண்டனை விலக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. சிறையில் இருந்து வெளிவந்த நவாஸ் ஷெரிப் பல ஆண்டுகளாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் லண்டனில் இருந்தபடியே இணைய வழி சந்திப்பு மூலமாக பாகிஸ்தானில் இருக்கும் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய நவாஸ் ஷெரீப் அடுத்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தான் மீண்டும் பாகிஸ்தானுக்கு வர இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார். அடுத்து வர இருக்கும் பொது தேர்தலில் தனது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட போவதாக அறிவித்தார். மக்கள் பேராதரவுடன் நிச்சயம் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தனது தலைமையிலான ஆட்சி பாகிஸ்தானை திவாலாகும் நிலைமையிலிருந்து மீட்டு படிப்படியாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு போகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே சமயத்தில் தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது. இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் தான் விடுதலை சுயராஜ்யம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இந்த 75 ஆண்டுகளில் பாரதம் பொருளாதாரம் கல்வி வேலை வாய்ப்பு தனிநபர் வருமானம் சர்வதேச உறவுகள் உள்நாட்டு பாதுகாப்பு அத்தியாவசிய உள் கட்டமைப்புகள் ராணுவத்தை நவீனமயமாக்குவது பாதுகாப்பு படைகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் நவீன தொழில்நுட்பங்கள் தளவாடங்கள் வாங்கி குவிப்பது ஏவுகணை உற்பத்தி விண்வெளி ஆய்வுகள் செயற்கைக்கோள் ஏவுகை தளம் நிர்மாணம் உலகளவில் பெரும் வளரும் பொருளாதாரமாக உருப்பெற்று இருப்பது ஒரு புறம் சந்திராயன் ஆதித்யா மத்ஸயா என்று சூரியன் சந்திரன் ஆழ்கடல் ஆய்வுகளுக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்புவது மறுபுறம் ஜி 20 மாநாட்டை தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்தி முடித்து உலகில் பாதுகாப்பான பிரதேசம் பாரதம் என்பதை உலகிற்கு நிரூபித்தது என்று வல்லரசு பாதையில் வெற்றிகரமாக முன்னேறி போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் மறுபுறம் பாகிஸ்தானில் திரும்பிய பக்கமெல்லாம் பஞ்சம் பசி பட்டினி வன்முறை கலவரம் பொது அமைதியின்மை சட்டம் ஒழுங்கு சீர்கேடு ராணுவம் காவல் துறை மீது தாக்குதல் பொதுமக்கள் உயிரிழப்பு கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைகள் வேலையில்லா திண்டாட்டம் அதன் மூலமாக சமூக குற்றங்கள் விண்ணை தொடும் விலைவாசி உயர்வு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள் உயிர்காக்கும் உபகரணங்கள் கூட இல்லாமல் பரிதவிக்கும் பாகிஸ்தான் மக்களின் பரிதாப நிலை பெட்ரோல் டீசல் ன் விலை உயர்வு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் கடுமையான தட்டுப்பாடு என்று பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது.
பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு அபாய அளவிற்கு கீழே போய் பன்னாட்டு நிதியின் மனிதாபிமான உதவியில் தான் தேசம் இன்னுமும் இயங்கும் பரிதாப நிலை. தேசத்தின் நாடாளுமன்ற வளாகத்திற்கான மின் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் பல மாதங்கள் பாக்கி இருந்ததால் பாகிஸ்தான் மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்த நிலையில் மின்சார இணைப்பின்றி பாகிஸ்தான் நாடாளுமன்றமே முடங்கும் நிலையும் கடந்த ஆண்டு ஏற்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதிய பாக்கி. ராணுவம் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்குவதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை. ஆயுதங்கள் ராணுவ தளவாடங்கள் எந்நேரமும் தீவிரவாதிகளின் கைகளுக்கு போக கூடும் என்ற அச்சம். பன்னாட்டு நிதியத்தின் கையிருப்பும் வேகமாக தீர்ந்து வருவதால் அடுத்து என்ன செய்வதென்று? தெரியாத நிலையில் பாகிஸ்தான் திவாலை நோக்கி மிக வேகமாக நகர்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பிய நவாஸ் ஷெரீப் இதற்கெல்லாம் பாகிஸ்தானின் சமகால ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை லஞ்சம் ஊழல் திறமையான வெளியுறவுத்துறை நிர்வாகமின்மை காரணமாகத்தான் இவ்வளவு சீர்கேடுகள் பாகிஸ்தானை சூழ்ந்து இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
கடந்த காலங்களில் பாரதத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு தலைமையில் இருந்த போது வெறும் ஒரு பில்லியன் டாலர் அளவிலான அந்நிய செலாவணி கையிருப்பு மட்டுமே இந்தியாவிடம் இருந்தது . ஆனால் தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அது 600 கோடி பில்லியன் டாலர்களாக அந்நிய செலாவணியை மலை போல் குவித்து வைத்துள்ளது . ஆனால் வளமாக இருந்த பாகிஸ்தான் இன்று உலக நாடுகளிடம் பிச்சை கேட்டு நிற்கிறது.
பாரதத்தின் பிரதமர் ஒவ்வொரு நாடாக பயணித்து அவர்கள் தேசத்திற்கு வெற்றிக்கான வளர்ச்சிக்கான அடுத்த நிலையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ ஒவ்வொரு நாடாக பயணித்து பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய உதவிகள் மனிதாபிமான உதவிகள் கடன் உதவிகள் வேண்டும் என்று ஒவ்வொரு நாடாக கையேந்தி வலம் வருகிறார். இந்நிலை மாற வேண்டும். எதிர்வரும் தேர்தலில் பாகிஸ்தான் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் படிப்படியாக பாகிஸ்தானின் நிலையை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைமையிலான தனது ஆட்சி சரி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானின் சீரழிவு பற்றி சில காலம் முன்பு பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கானும் பாரதம் எல்லாத் துறையிலும் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும் ஆசிப் அலி சர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ சர்தாரி நவாஸ் ஷெரீப் ஒரு வலுவான ராணுவ ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு திட்டமிடுவதாக சந்தேகம் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து ஒரு ரகசிய உடன்படிக்கையும் மேற்கொண்டு அதன் மூலம் மீண்டும் ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் நவாஸ் மீது குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி என்னும் பிலாவல் கட்சியின் தலைவர்கள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் கட்சியையும் தலைவரையும் டார்லிங் ஆப் தி மிலிட்டரி என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிரியமான கட்சி என்று குறிப்பிட்டு பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர திட்டமிடுவதாக நவாஸ் மற்றும் அவர் சார்ந்த பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியை குற்றம் சாட்டுகிறார்கள்.பாகிஸ்தானின் சமகால ஆட்சியாளர்கள் முன்னாள் ஆட்சியாளர்கள் என்று வரிசையாக ஒரு புறம் பாகிஸ்தானின் சீரழிவு பொருளாதார வீழ்ச்சி உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கும் அவலம் என்று அனைத்தையும் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள். பாரதம் அவர்கள் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உச்சத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிப்பதையும் அவர்களின் வாயாலயே ஒத்துக்கொள்கிறார்கள்.
இதன் வெளிப்பாடு ஒருபுறம் தங்களது தேசம் சீரழிவது என்றாலும் மறுபுறம் எந்த பாரதத்தின் வளர்ச்சியை தடுப்பது அதன் மீது நேரடியாக மறைமுகமாக பயங்கரவாதத்தை யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டு பொருளாதார சேதங்கள் உயிர் சேதங்கள் ஏற்படுத்துவது அதன் மூலம் உலக நாடுகளின் போஷாக்கோடு வளர்ந்து வந்தது என்ற தங்களின் கடந்த கால அராஜகம் அத்தனையும் முடிவுக்கு வந்ததில் விரக்தியில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.
இனி எந்த காலத்திலும் முன்பு போல் பாகிஸ்தானால் சுய உழைப்பு முயற்சி இன்றி இந்திய எதிர்ப்பு மட்டுமே வைத்து வளமாக வாழும் நிலையை கொண்டு வர முடியாது என்ற வேதனையும் விரத்தியுமே அவர்கள் அத்தனை பேரின் பேச்சிலும் வெளிப்படும் ஆழ்ந்த உண்மை. இதை இந்திய பாகிஸ்தானின் கடந்த கால பொருளாதார அரசியல் சூழ்நிலைகளையும் சமகாலத்தில் இருக்கும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் உணர்ந்த யாவரும் உணர முடியும்.