நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள், தேச விரோதிகள், தீய சக்திகளின் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி, 4 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் 7-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி, பஞ்சாப் தவிர இதர 4 மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் வெற்றிபெறும் என்று கூறின. ஆனால், எதிர்க்கட்சிகளும், தேச விரோத சக்திகளும், அந்நிய கைக்கூலிகளும், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. தோல்வியடையும் என்று விமர்சனம் செய்ததோடு, விஷம பிரசாரங்களையும் செய்து வந்தனர். ஆனால், தேர்தல் முடிவு அனைவரது முகத்திலும் கரியை பூசும் வகையில் அமைந்துவிட்டது.
5 மாநிலங்களில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று 10-ம் தேதி நடந்தது. இதில்தான், பஞ்சாப் தவிர இதர 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, மேற்கண்ட 4 மாநிலங்களிலும் பா.ஜ.க.வே ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், உ.பி.யிலும், உத்தரகாண்டிலும் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மணிப்பூரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கோவாவில் சுயேட்சைகள் ஆதரவளிக்க முன்வந்திருப்பதால் அங்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்த 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்ற இடங்கள் விவரம்:-
உத்தரப் பிரதேசம்: மொத்த தொகுதிகள் 403. பா.ஜ.க. – 273, சமாஜ்வாடி – 125, காங்கிரஸ் – 2.
உத்தரகாண்ட்: மொத்த தொகுதிகள் 70. பா.ஜ.க. – 47, காங்கிரஸ் – 19.
மணிப்பூர்: மொத்த தொகுதிகள் 60. பா.ஜ.க. – 32, காங்கிரஸ் – 5.
கோவா: மொத்த தொகுதிகள் 40. பா.ஜ.க. – 20, காங்கிரஸ் – 11.