மாணவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பள்ளி மாணவர்களின் இலவச பேருந்து பயணம் – அரசின் அலட்சியம்

மாணவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பள்ளி மாணவர்களின் இலவச பேருந்து பயணம் – அரசின் அலட்சியம்

Share it if you like it

இரண்டு ஆண்டுகால கொரோனா முடக்கத்திற்கு பிறகு இந்த கல்வி ஆண்டில் தான் முழு இயல்பு நிலையில் பள்ளிகள் மீண்டும், இயங்கத் தொடங்கி இருப்பதால் ஆசிரியர்- மாணவர் இருதரப்பிலும் பணிச்சுமை அதிகம். குறிப்பாக 9- முதல்,-12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தொடக்கம் முதலே சிறப்பு வகுப்புகள் தொடங்கி விட்டது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட சிறப்பு வகுப்பு முடிந்து மாலை அரசு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமே பெரும்பாலும் வீடு திரும்புகிறார்கள். அரசு – தனியார்பள்ளி பள்ளி மாணவர்களை, பொறுத்தவரை 90 சதம் மாணவர்கள் அரசு பேருந்தில் பயணித்தே பள்ளிக்கு போகிறார்கள்.

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற சலுகைக்கான அடையாள அட்டையோடு அரசு பேருந்தில் தினசரி,பயணிக்கும் பள்ளி மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. அரசு பேருந்து இயக்கத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பத்து பேருந்துகள் இருந்த இடத்தில் இன்று நான்கு பேருந்துகள் கூட இல்லை. 10 நிமிட இடைவெளியில் பேருந்துகள் பயணித்த,தடங்களில் இன்று அரைமணிக்கு ஒரு பேருந்து கூட இல்லை. அதிலும் குறிப்பாக மகளிருக்கு இலவச பயண சலுகை வந்த பிறகு அதற்கான அடையாளம் கொண்ட பேருந்துகள் பத்தில் ஒன்று என்ற அளவில் தான் இயக்கப்படுகிறது. இரு மடங்கு கட்டணம் கொண்ட டீலக்ஸ் பேருந்துகளே பெரும்பாலும் இயங்குவதால், பெரும்பாலானோர் அதை தவிர்க்கின்றனர்.

இலவச பயணம் வேண்டி பெண்களும், குறைந்த கட்டணம் வேண்டி ஆண்களும் அதிகம் பயணீப்பது சில குறிப்பிட்ட, நகர பேருந்தில் மட்டுமே என்பதால் அந்த,வகை, நகர,பேருந்துகள் வருவதும் அபூர்வம். வந்ததும் கூட்டம் நிரம்பி விடும். இதனால் இந்த பேருந்துகளில், மட்டுமே இலவச பஸ்பாஸ் சலுகையில் பயணிக்கும் மாணவர்கள் நிற்க கூட இடமின்றி படிகளில் பயணிக்கும் கொடுமை நிலவுகிறது. இந்த வகை நகர பேருந்து இயக்கம் அரிதாகி விட்டதால், காலையில் பள்ளிக்கு நேரத்தோடு போகவும், மாலையில் வீடு திரும்பவும் எவ்வளவு கூட்டமிருந்தாலும் சிரமத்தோடு பயணிக்கும் கட்டாயம் மாணவர்களுக்கு நேரிடுகிறது. அவர்கள் கூட்ட நெரிசலில் படும் பாட்டை விட அரசு பேருந்து நடத்துனர்- ஒட்டுநர் மற்றும் வழித்தட ஆய்வாளர்களிடம் சிக்கி படும்பாடு நம் நெஞ்சை பிழிந்து விடும்.

இலவச பயணம் என்ற அரசு சலுகையை வைத்து அந்த மாணவர்களை ஏதோ பிச்சைக்காரர்களை போல நடத்துவதும், பேசுவதும் காண சகிக்காது, பல பேருந்துகளில் சமீப காலங்களில் நடத்துனர் மற்றும் ஆய்வாளரிடம் கடூம்வாக்கு வாதத்தில் ஈடுபடும் அனுபவமும் தொடர்கிறது. தேர்தல் வெற்றிக்காக,மகளிருக்கு இலவச பயணம் என்ற அரசின் முட்டாள்தனமான நிர்வாகத்தை எதிர்த்து அரசை கேள்வி கேட்க துப்பில்லாதவர்கள் அரசு பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்வதால் தான் போக்குவரத்துத்துறை நஷ்டமாகி எங்கள் குடியே மூழ்கி போகீறது என்று பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?.

பேருந்தில் இடமில்லை என்று வேறு வழியின்றி தான் மாணவர்கள் நெரிசலில் பயணிக்கிறார்கள். அவர்களை அடுத்த பேருந்தில் வா இதில் ஏறாதே என்று இறக்கி விடும் அதிகாரத்தை,ஒட்டுநருக்கும் நடத்துனருக்கும் யார் கொடுத்தது?. அதிலும் பள்ளி மாணவர்களை தகாத வார்த்தையில் பேசுவதும் ,அடிப்பதும் கண்டு மனம் பதைக்கிறது. பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தை எதிர்பார்த்து கால்கடுக்க சாலை ஒரம் நின்றுகொண்டிருக்கும் போது, அவர்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ அல்லது தள்ளியோ, பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதும், அதை பார்த்த மாணவர்கள் பதறிப்போய் ஓடி வந்து பேருந்தில் முண்டியடித்து ஏறுவதும் , அவர்கள் ஏறுவதற்குள் பேருந்தை இயக்குவதும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்னே ஒடி வந்து ஏறுவதும் பார்க்கும் போது பிள்ளை பெற்ற யாருக்கும் மனம் கலங்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து சீரான பேருந்து இயக்கம் இருந்தால் மாணவர்கள் நிச்சயம் இப்படி அவதியுற மாட்டார்கள்.

ஒரு வேளை,மாணவர்கள் கூட்டமாக பயணித்தாலும்,மாணவிகள் மற்றும் சிறு குழந்தை மாணவர்கள் காத்திருந்து அடுத்த,பேருந்தில் இலகுவாக பயணிக்கவே விரும்புவார்கள். அதனில் நிச்சயம் நெரிசலை தவிர்க்க முடியும்.ஆனால் , பேருந்து வருவதே அபூர்வம், அதிலும் அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றால் போதும் ,பேருந்தில் நிற்க இடம் கிடைத்தாலே போதும் என்ற அளவில் தான் மாணவர்களின் மன உளைச்சல் இருக்கும் போது,

அவர்கள் நேரத்தோடு பள்ளி போகவும் , வீடு திரும்பவும் மிகுந்த சிரமத்தோடே பயணிக்க வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.

இதனால் அவர்கள் கேட்கும் ஏளன பேச்சுகள், அவமானம், மன உளைச்சல், விபத்து, காயம் ,உயிரிழப்பு இவற்றிற்கெல்லாம், யார்பொறுப்பு?.

நகர பகுதிகளிலேயே இந்த”நிலை எனில் கிராம பகுதிகள் மற்றும் மலை கிராம பகுதி மாணவரகள் நிலை? மாணவர்களை தேசத்திற்கு எதிராக மூளைச்சலவை செய்யவும், தனிமனித சுதந்திரம்,என்ற பெயரில் கலாச்சார சீரழிவில் தள்ளி விடும் பிரியாணி ஆர்வலர்களும் இதை பற்றி பேசுவார்களா?. மாணவர்களே! இளைஞர்களே ! போராட வாருங்கள்! என்று அவர்களை குட்டிச்சுவராக்க நினைக்கும் மாணவர் அமைப்புகளும் கள்ள மவுனம் தான் காக்குமா?. பள்ளி மாணவர்களிடம் பெரியார் ஆயிரம் என்று கடை விரித்தவர்கள் மாணவர்களே! இளைஞர்களே அனைவரும் காதலியுங்கள்! கெட்டு குட்டிச்சுவராக போங்கள் என்று உசுப்பிவிடும் கழிசடைகள் கண்களுக்கு அரசு பேருந்து பயணத்தை சார்ந்தே பயிலும் பள்ளி மாணவர்களின் இந்த தினசரி போராட்டம் கண்ணுக்கு தெரியுமா?.

பள்ளி மாணவர்கள் படியில் தொங்குகிறார்கள். கண்டித்தால் அடிக்க வருகிறார்கள் அதனால் பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் கொடுத்ததால் ஆங்காங்கே போக்குவரத்து காவல்துறையினரை நிறுத்தி கண்காணிப்பு செய்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாப்பது சரி.

அதே போக்குவரத்து பணியாளர்கள் பேருந்துகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்காமல் பேருந்துகள் சரியாக நிறுத்தத்தில் நிறுத்தாமல் தள்ளி போய் நிறுத்துவது, ஓடி வந்து ஏறும் மாணவர்களை அடித்து அனாகரிகமாக பேசுவது என்று செய்வதை யாரிடம் புகார் கொடுப்பது ?.

போதிய எண்ணிக்கையில் பேருந்து இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான போக்குவரத்து இல்லை. இதனால் தினசரி சரியான நேரத்தில் பள்ளி போவது சிக்கல். தேர்வு நடைமுறை வகுப்புகள் நேரத்தில் பல மணிநேரம் முன்பு பிரமாணம் செய்து போக வேண்டிய முன் எச்சரிக்கை தவறினால் தேர்வு படிப்பு பாழாகும் நிலைக்கு காரணமான போக்குவரத்து துறை மீது யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் ?

தொட்டதற்கெல்லாம் அரசை எதிர்த்து போராட்டம் – ஆர்ப்பாட்டம் என்று ஆசீரியர்களை,தூண்டிவிட்டு மாணவர்களை”பாடாய் படுத்தி அரியணை அமர்ந்த ,அரசுக்கு பள்ளி,மாணவர்களின் பாதுகாப்பற்ற இந்த மரண அவஸ்தையும், அபாய பேருந்து பயணமும் பற்றி சீந்திக்க நேரமிருக்குமா? என்று தெரியாது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 500-1000 த்திற்கு தேர்தலில் தங்கள் வாக்குரிமையை விற்கும் அற்ப பெற்றோர்களே! நீங்களாவது இதை பார்த்து யோசியுங்கள் ! இனியாவது நம் குழந்தைகள் பாதுகாப்பு விட வேறெதும் பெரிதில்லை என்று யோசியுங்கள். அடுத்த தலைமுறையாவது சீர்படட்டும்.


Share it if you like it