ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச முகாம் !

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச முகாம் !

Share it if you like it

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும்.

சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.

இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி தேசிய பல் துலப்பு தினத்தை முன்னிட்டு, Dr.ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்.மற்றும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை. இணைந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் இலவச முகாம் ஒன்றை இன்றும் (06-11-2023,07-11-2023) நாளையும் நடத்தப்பட உள்ளது. அந்த முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக, பல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். நேரம் 9 மணி முதல் 2 மணிவரை என குறிப்பிடப்பட்டு உள்ளது.


Share it if you like it