இந்தியாவில்தான் கருத்து சுதந்திரமெல்லாம்… பாகிஸ்தானில் சதக்.. சதக்தான்!

இந்தியாவில்தான் கருத்து சுதந்திரமெல்லாம்… பாகிஸ்தானில் சதக்.. சதக்தான்!

Share it if you like it

மத நிந்தனை செய்ததற்காக பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.

ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசுவது, கார்ட்டூன் வரைவது, கவிதை எழுதுவது, சீரியல் எடுப்பது, திரைப்படம் எடுப்பது என்பதெல்லாம் இந்தியாவில் சர்வசாதாரணமாகி விட்டது. குறிப்பாக, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. கருப்புச் சட்டையை போட்டுக் கொண்டால் போதும், எந்த சாமியைப் பற்றி வேண்டுமானாலும் வசை பாடலாம், தரம் தாழ்த்தி பேசலாம். அவ்வளவு ஏன், ஆபாச வார்த்தைகளால்கூட அர்ச்சனை செய்யலாம். கேட்க நாதி இல்லை. மீறி கேட்டால் இந்தியா ஜனநாயக நாடு, இங்கு எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்று வாய்ச்சவடால் பேசுவார்கள். ஆனால், அண்டை நாடுகளில் இவ்வாறு செயல்பட்டால் மரண தண்டனைதான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆம். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் அனிகா அட்டிக். இவரும் ஃபரூக் என்பவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போது, அனிகா அட்டிக் மத ரீதியான சில கேலிச்சித்திரங்களை ஃபரூக்குக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் அனிகாவுக்கும், ஃபரூக்குக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். உடனே, அனிகாவை பழிவாங்குவதற்காக அவர் அனுப்பிய கேலிச்சித்திரங்களை எல்லாம் சேகரித்து, சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்து விட்டார் ஃபரூக். இதைத் தொடர்ந்து, அனிகா மீது வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீஸார், அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்தான் மதத்தையும், மத குருமார்களையும் இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரங்களை அனுப்பியதற்காக அனிகா அட்டிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இப்படியொரு தீர்ப்பு இந்தியாவில் அளிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள், நடுநிலை என்கிற போர்வையில் வலம் வந்து கொண்டிருக்கும் மத நிந்தனை வாதிகள். ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், இந்தியாவில் மட்டுமே உங்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைக்கும். பிற நாடுகளுக்குச் சென்று உங்களது கருத்து சுதந்திரத்தைக் காட்டினால் சதக் சதக்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்கள் மதப் பற்றாளர்கள்.


Share it if you like it