கோலாகலமாக தொடங்கிய ஜி 20 மாநாடு –  உலகமே உற்று நோக்கும் பாரதத்தின் தலைநகரம்

கோலாகலமாக தொடங்கிய ஜி 20 மாநாடு – உலகமே உற்று நோக்கும் பாரதத்தின் தலைநகரம்

Share it if you like it

இன்றைய தினம் சர்வதேச வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு பாரதத்தின் தலைநகர் புது தில்லியில் கோலாகலமாக தொடங்கியது பாரத பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையில் மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும் இந்த உச்சி மாநாடு தொடக்க விழாவுடன் இன்றைய அமர்வு தொடங்கியது. தலைநகர் புது தில்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டின் நுழைவாயிலில் சபை நாயகராக நடராஜர் திரு உருவ சிலை நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரதத்தின் பிரதமர் அமைச்சரவை சகாக்கள் முக்கிய அலுவலர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரி கூடுகையில் கோலாகலமாக தொடங்கிய இந்த ஜி 20 மாநாட்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் தொடக்க நிகழ்ச்சிகளில் அரங்கேறியது . இதன் மூலம் பாரதத்தின் பன்முக கலாச்சாரத்திற்கு இருக்கும் உயர்ந்த கௌரவத்தை சர்வதேச சமூகத்தின் முன் பாரதத்தின் மத்திய அரசு மீண்டும் ஒரு முறை நிலை நிறுத்தி இருக்கிறது.

ஜி 20 மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி 21 ஆம் நூற்றாண்டில் நகர்கிறோம் . இந்த நூற்றாண்டிற்கென்று புதிய வழிகாட்டுதல்கள் தேவை. அந்த வழிகாட்டுதல்களை உலக நாடுகளின் நன்மைக்காக முன்னெடுப்பதில் பாரதம் பங்களிப்பை வழங்கும். உலக நாடுகள் சுய வெறுப்பு வெறுப்பு கடந்து மக்களின் நலனுக்காக ஓரணியில் ஒன்று திரள வேண்டும். இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் உணவு – குடிநீர் – மருத்துவம் சுகாதாரம் – பாதுகாப்பு என்று அனைத்தும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

பரஸ்பர நம்பிக்கை – நல்லெண்ணம் – புரிதல் அடிப்படையிலான நல்லரசுகளை முன்னெடுத்து அதன் மூலம் தீவிரவாதம் – பயங்கரவாதம் – யுத்தம் இல்லாத ஒரு உலகத்தை கட்டமைக்க வேண்டும் . உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று கொரோனாவை விழுத்தி நம்மை தற்காத்துக் கொண்டுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியை எதிர்த்து நம்மை நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும் என்றால் நிச்சயம் யுத்தம் பயங்கரவாதம் போர் அச்சுறுத்தல் இல்லாத ஒரு அமைதியும் சாந்தியும் சமாதானமும் நிலவும் உலகத்தை கட்டமைக்கவும் நம்மால் முடியும். அதை செய்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்கா அதிபர் ஜோபைடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் அதிபர்களும் பிரதமர்களும் கலந்து கொண்டுள்ள இந்த ஜி 20 மாநாடு. சர்வதேச அளவில் நோய் தடுப்பு பயங்கரவாத எதிர்ப்பு சுற்றுச்சூழல் நாடுகளுக்கிடையே ராஜிய புரிந்துணர்வு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்கள் என்று பல்வேறு சர்வதேச நிகழ்வுகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சி வரைவுகள் முன்னெடுக்கப்படுகிறது.

சந்திராயன் வெற்றி – ஆதித்யா எல் ஒன் வெற்றிப் பயணம் என்று விண்வெளியில் புதிய வெற்றி பயணத்தை தொடங்கி இருக்கும் பாரதத்தின் மூலம் தங்களது நாட்டிற்கான திட்டங்கள் ஆய்வு பணிகளை பாரதத்தோடு ஒருங்கிணைந்து செய்ய விரும்பும் வல்லரசு நாடுகள் அதற்கான திட்டங்கள் மறைவுகளோடு தயாராகி வந்திருக்கும் . அந்த வகையில் இந்த ஜி 20 மாநாட்டின் முடிவில் உலகில் அசைக்க முடியாத ஒரு ஆளுமையாக பாரதம் உருப்பெற்றிருக்கும். இந்த ஜி 20 மாநாட்டு நிகழ்வுகளுக்காக இந்த மூன்று நாட்கள் புது தில்லி முழுவதும் தீவிரமான பாதுகாப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக இந்தியாவிற்கு வரும் மேல்நாட்டு அதிபர்கள் அவர்களுக்கென்று இருக்கும் விருந்தினர் மாளிகை அல்லது குடியரசு தலைவர் மாளிகையில் தங்குவது வழக்கம். பாரதத்தின் பிரதமர் உள்ளிட்டவர்கள் அங்கு அவர்களை நேரில் சென்று சந்திப்பதில் வழக்கமான வரலாறு. ஆனால் இந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேரடியாக பிரதமரின் இல்லத்திற்கு சென்று மோடி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதும் நட்புறவு பாராட்டியதும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இதன் மூலம் அமெரிக்கா பாரதத்தை தவிர்க்க முடியாத சக்தியாக தனக்கு நிகரான ஒரு ஆளுமையாக ஒப்புக்கொண்டதாகவும் அதை உலகிற்கு சொல்லாமல் சொல்லும் ஒரு கட்டியமாகவே சர்வதேச அரசியல் களம் பார்க்கிறது.

இந்த ஜி 20 மாநாட்டை ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் அதிபர்கள் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் ராஜ்ஜிய தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச ஆளுமைகளை எல்லாம் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து புது தில்லியில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு துணிந்து முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தவும் துணிந்ததன் மூலம் மோடி அரசு பாரதத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத அமைதியும் பாதுகாப்பும் நிலவும் ஒரு தேசமாக உலகத்தின் பார்வையில் நிலைநிறுத்த வேண்டும் என்று பிரயத்தனம் செய்வது தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டிற்கு தலைநகர் புதுதில்லி தயார் செய்வது முதல் வரும் வெளிநாட்டு தலைவர்களின் பாதுகாப்பிற்கு வேண்டிய ஏற்பாடுகளை முன்னின்று செய்வது வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் உழைத்ததும் அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் பணியும் வார்த்தைகளில் பாராட்ட முடியாது. அவர்களின் உழைப்பு அர்ப்பணிப்புக்கு பாரதம் தலை வணங்குகிறது. இறைவன் துணையால் இந்த ஜீ 20 மாநாடு வெற்றி கரமாக நடந்தேறி உலகம் நலமும் வளமும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது.

ஜெய் பாரத் — ஜெய் ஹிந்த்


Share it if you like it