காயத்ரி ரகுராமிற்கு புது பதவி: பா.ஜ.க தலைவர் அறிவிப்பு!

காயத்ரி ரகுராமிற்கு புது பதவி: பா.ஜ.க தலைவர் அறிவிப்பு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காயத்திரி ரகுராமிற்கு புதிய பதவியை வழங்கியிருப்பதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்ககளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கட்சியின் அடிமட்டத்தில் தொடங்கி மேல்மட்டம் வரை பல்வேறு மாற்றங்களை செய்து கொண்டு இருக்கிறார். இதனைதொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர். அந்தவகையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராமை பா.ஜ.க தலைவர் நியமனம் செய்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவராக இதற்கு முன்பு காயத்ரி பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பா.ஜ.க மூத்த தலைவர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் காயத்ரி ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it