இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் கீர்ட் வில்டர்ஸிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நெதர்லாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கீர்ட் வில்டர்ஸ். இவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அடாடவடிகளையும், அட்டூழியங்களையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார். இதுதவிர, ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதனிடையே, “The Kerala Story” படத்தை ஐரோப்பா முழுவதும் வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். மேலும், இப்படத்தை, ஐரோப்பா நாடுகள் தங்களது திரையரங்குகளில் வெளியிட தயவு செய்து முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். நீங்கள் விரும்பினால் இப்படத்தை நெதர்லாந்த் நாடாளுமன்றத்தில் நான் காட்சிப்படுத்த தயார் என அதிரடியாக கூறியிருந்தார்.
இப்படியாக, அவரது அதிரடி பேச்சுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவன் கீர்ட் வில்டர்ஸிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இதற்கு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்த பதில் இதோ :
அவர்கள் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டி வருகின்றனர். ஆனால், இன்று வரை அந்த மிரட்டல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இன்றுவரை நான் உயிருடன் இருக்கிறேன். இஸ்லாம் மற்றும் முஹம்மது பற்றி உண்மையைப் பேசுவதை நான் நிறுத்த மாட்டேன் என கூறியுள்ளார்.