நுபுர் ஷர்மா எதிரொலி: நெதர்லாந்து எம்.பி.க்கு மிரட்டல் காணொளி!

நுபுர் ஷர்மா எதிரொலி: நெதர்லாந்து எம்.பி.க்கு மிரட்டல் காணொளி!

Share it if you like it

நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக இருக்கும் நெதர்லாந்து எம்.பிக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் கலந்து கொண்டார். அந்தவகையில், ரெஹ்மானி என்கிற இஸ்லாமியரும் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசும் பொழுது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வணங்கும் சிவலிங்கத்தை மிகவும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு, நுபுர் ஷர்மா குரானில் இருந்து சில கருத்துக்களை மேற்கோள் காட்டி தக்க பதிலடியை கொடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, பல இஸ்லாமிய நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து விடுத்து இருந்தன. அந்தவகையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரபு நாடுகளுக்கு ஒத்து ஊதும் பணியை செய்தன. இதுதவிர, இந்தியாவின் நற்பெயர் கெட்டு விட்டது என நாட்டு மக்களிடையே தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்படிப்பட்ட சூழலில் தான், இந்தியா மன்னிப்புக் கேட்டக் கூடாது என்று நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ் இந்தியா மற்றும் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் தான், நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவர் க்ரீட் வீல்டர்ஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், நான் நுபுர்ஷர்மா மற்றும் இந்து மதத்தை ஆதரிப்பதாலும், வன்முறை மற்றும் சர்வாதிகார இஸ்லாமிய போக்கிற்கு எதிராக நிற்பதால் அடிப்படைவாதிகள் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுகின்றனர். இதற்கு, எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று ஆணித்தரமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.


Share it if you like it