போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – கோவா முதல்வர் அதிரடி..!

போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – கோவா முதல்வர் அதிரடி..!

Share it if you like it

இந்து கலாச்சாரத்தை பாதுகாக்க போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் கோவா முதல்வர் அதிரடி.

போர்ச்சுகீசிய கிறிஸ்தவ மிஷநரிகள் கோவாவில் நிகழ்த்திய கொடூர சம்பவங்கள் ஏராளம், ஹிந்து ஆலயங்கள் அழிப்பு, மதம் மாற மறுத்த ஹிந்துக்கள் படுகொலை, ஹிந்து குழந்தைகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள், ஹிந்துக்கள் புனிதமாக வழிபடும் பசுவை கொல்லுதல், பசு மாமிசத்தை ஹிந்துக்கள் வாயில் கட்டாயமாக திணித்தல், பல புனித ஆலயங்களை கிறிஸ்தவ மிஷநரிகள் சின்னா பின்னமாக ஆக்கிய சம்பவங்கள் அந்நாட்களில் ஏராளம்.

இந்த நிலையில் பா.ஜ.க-வை சேர்ந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்கள் தெரிவித்த கருத்து கோவா ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

போர்ச்சுகீசிய ஆட்சியின் போது அழிக்கப்பட்ட சில கோவில்களை நம் முன்னோர்கள் மீண்டும் கட்டியுள்ளனர். சிலவற்றை நமது அரசு அழகுபடுத்த உதவியுள்ளது. புனரமைக்கபட வேண்டிய கோவில்கள் இன்னும் அதிகம் உள்ளது. கோவா இந்தியாவுடன் இணைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்பும் கூட போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டி தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் அதற்கு உங்களது ஆதரவு தேவை என கோவா முதல்வர் அம்மாநில மக்களிடையே கோரிக்கை வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://indianexpress.com/article/cities/goa/goa-temples-destroyed-portugese-hindu-culture-pramod-sawant-7684509/


Share it if you like it