கோவா 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

கோவா 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Share it if you like it

கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேர், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க.வில் இணைந்தனர்.

கோவாவில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 20-ல் வெற்றிபெற்றது. தொடர்ந்து, மகாராஷ்டிவாதி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சைகளின் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்தனர். ஆகவே, 8 பேரும் பா.ஜ.க.வுக்கு தாவப்போவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. உடனே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சி மாறமாட்டோம் என்று அவர்களிடம் சத்தியம் வாங்கினார். இதனால், பரபரப்பு அடங்கியது.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்களில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, அவரது மனைவி டெலிலா லோபோ, கேதார் நாயக், ருடால்போ பெர்னாண்டஸ், கோவா முன்னாள் மின்துறை அமைச்சர் அலிக்சோ செக்வேரா, ராஜேஷ் பால் தேசாய், சங்கல்ப் அமோன்கர் ஆகியோர் அடங்குவர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோரின் கரங்களை வலுப்படுத்த பா.ஜ.க.வில் இணைந்துள்ளோம்” என்றார்.

இதன் மூலம் கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க.வின் பலம் 33 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சியில் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆல்டோன் டி’கோஸ்டா, யூரி அலெமாவோ மற்றும் கார்லோஸ் ஃபெரீரா ஆகியோர்தான் அவர்கள். ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்தி வரும் அக்கட்சியிலேயே ஒற்றுமை இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.


Share it if you like it