பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பரவலாக மதமாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக, கடற்கரை ஏரியாக்களில் வசிக்கும் கிராம மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆகவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடை தொடர்பாக, சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கோவாவிலும் மதமாற்ற சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவா மாநிலம் பனாஜியைச் சேர்ந்தவர் டோமினிக் டிசோசா. கிறிஸ்தவ பாதிரியாரான இவரது மனைவி ஜோன். இருவரும் வடக்கு கோவாவிலுள்ள சலிகோவா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக 2 பேர் மபுசா போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, இருவர் மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.