‘ஹே மனிதா…’ பாடல் நாளை வெளியீடு!

‘ஹே மனிதா…’ பாடல் நாளை வெளியீடு!

Share it if you like it

‘ஹே மனிதா…’ என்கிற மோடிவேஷனல் பாடல் மீடியான் யூடியூப் சேனலில் நாளை (மே 28-ம் தேதி) வெளியிடப்படுகிறது.

வேலை இழந்த ஒரு இளைஞன், தனது லட்சியத்தை அடையும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம், உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்பதை உணர்த்தும் வகையில், பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. அதேசமயம், வாழ்க்கையில் விரக்தியடைந்து துவண்டு கிடக்கும் ஒரு இளைஞனை தட்டி எழுப்பி உத்வேகப் படுத்தும் வகையில் மோடிவேஷனல் பாடலாகவும் இது அமைந்திருக்கிறது. மேலும், உழைக்கும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாராட்டும் வகையிலும் இப்பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.

இப்பாடலை எழுதி, இயக்கி இருக்கிறார் ஆனந்த் டி பிரசாத். இப்பாடலுக்கு தகுந்தார்போல அற்புதமாக இசையமைத்திருக்கிறார் எம்.சி. தமிழன். இப்பாடலை எம்.மணிகண்டன் தயாரித்திருக்கிறார். இப்பாடலுக்கு தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய்நாத். இப்பாடலை டாக்டர் கே.ஹரீஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இப்பாடலை தயாரித்திருக்கும் குழுவினர் கூறுகையில், “ஜூமோட்டோ, ஸ்விக்கி, டுங்ஸோ, ஜெப்டோ உள்ளிட்ட ஃபுட் டெலிவரி செய்யும் நபர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்” என்று தெரிவிக்கிறார்கள்.

இப்பாடலை காண மீடியான் யூடியூப் சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்து தயாராக இருக்கவும்.

https://www.youtube.com/c/Mediyaan


Share it if you like it