பா.ஜ.க தலைவர் நடித்த திரைப்படம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

பா.ஜ.க தலைவர் நடித்த திரைப்படம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

Share it if you like it

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, அதிரடி பேச்சின் மூலமாக அக்கட்சியின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதுதவிர, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இவரது தலைமையை ஏற்றுக் கொண்டு பா.ஜ.க.வில் தங்களை தொடர்ந்து இணைத்து வருகின்றனர். இந்நிலையில், அரபி எனும் கன்னட படத்தில் பா.ஜ.க தலைவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அந்தவகையில், அப்படத்தின் புகைப்படங்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. மாற்று திறனாளி ஒருவருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் கோச்சாக அண்ணாமலை நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டு நடித்து கொடுத்துள்ளார் என்று சமூகவலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடக சிங்கம் என்று அழைக்கப்பட்ட அண்ணாமலையின் நேர்மை, துணிச்சலை, போற்றும் விதமாக மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ’யுவரத்னா’ எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியை அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித் ராஜ்குமார் எனும் சாகாப்தம் முடிவடைந்தாலும் சாகாவரம் பெற்ற அவரது சாதனைகள் பிறருக்கு போதனைகளாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

45 இலவசப் பள்ளிக்கூடங்கள்,
26 அனாதை ஆசிரமங்கள்,
16 முதியோர் இல்லங்கள்,
19 கோசாலைகள்,
1800 மாணவர்களின் கல்வி
கண் தானம்…ect


Share it if you like it