விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியாபட்டி விளக்கு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கொரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில், 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 4.4 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் இருந்து நாகர்கோவில் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு அவற்றை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் தங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகள் விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.