கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், டாஸ்மாக்கை கண்டித்து பாடல் பாடி கூத்தடித்த பாடகர் கோவன், தற்போது தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கல்லா கட்டி வருவதை கண்டித்து பாடல் பாடாமல் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர் பாடகர் கோவன். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாட்டுப் பாடி டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும், அ.தி.மு.க. அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் சீண்டும் வகையில் இந்த பாடல் அமைந்திருந்தது. எனவே, அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அ.தி.மு.க. அரசு பதிவு செய்தது.
அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சியும், தற்போதைய ஆளும்கட்சியுமான தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்தனர். இந்த நிலையில், தற்போதைய விடியல் ஆட்சியில் கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், தி.மு.க. அரசோ டாஸ்மாக் கடைகளை மூடாமல், கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. ஆனால், கோமாளி கோவன் இதனை கண்டித்து பாடல் எதுவும் பாடவில்லை. இன்னும் சொல்லப்போனால் கோவன் இருக்கும் இடமே தெரியவில்லை. எனவே, தி.மு.க. அரசை கண்டித்து பாடல் பாடாமல் எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டார் கோமாளி கோவன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.