தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு ஹிந்து விரோத போக்கினை மிக தீவிரமாக மேற்கொள்வதும், ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
சிறுபான்மையினர் சட்டத்திற்கு புறம்பாக ஏதேனும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் அது குறித்து எதுவும் பேசாமல் கண்டும் காணாமல் விடியல் அரசு கடந்து செல்வது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் குறித்த செய்தி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் எல்லையில் உள்ள மோடாங்கல் மலையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு, அனுமதி இன்றி கட்டப்பட்ட சர்ச், வருவாய்த்துறை மூலம் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ரிஷிவந்தியம் தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை சமாதான கூட்டம் நடந்தது. அதே இடத்தில் மீண்டும் சர்ச் கட்டி வழிபாடு நடத்த, அப்பகுத்தி மக்கள் மனு வழங்கினர்.
வசந்தம் கார்த்திகேயன் பேசுகையில், “இந்த சம்பவத்திற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று, மீண்டும் அதே இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வாங்கி தருகிறேன் என்றார். அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். மீண்டும் அதே இடத்தில் சர்ச் கட்ட எம்.எல்.ஏ 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
ஹிந்து கோவிலை அனுமதி பெற்று கட்டியிருந்தாலும், பாவாடை கதறுச்சி'னா முன்னால நின்னு இடிப்போம், தடுக்க வந்தா தடியடி நடத்தி மண்டைய உடைப்போம், வழக்கு போட்டு ஓட விடுவோம்.
அதே அனுமதி இல்லாத சர்ச் இடிபட்டா, கூட சேர்ந்து ஒப்பாரி வைப்போம், அவங்களுக்கு ஆதரவா போயி ஆறுதல் சொல்லுவோம்
1/N pic.twitter.com/EBLCz0L12i— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 6, 2021