பாரதியார் சிலை திறப்பு விழா: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!

பாரதியார் சிலை திறப்பு விழா: தி.மு.க. கூட்டணி புறக்கணிப்பு!

Share it if you like it

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த பாரதியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக கவர்னர் ஆர்.என்,ரவிக்கும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் ஏழாம் பொறுத்தமாக இருக்கிறது. குறிப்பாக, நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கவர்னருக்கும், தி.மு.க. அண்கோவுக்கும் கடும் மோதலே ஏற்பட்டது. மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தி.மு.க. அண்கோ அழைப்பதற்கு கவர்னர் ரவி சரியான பதிலடி கொடுத்ததால், மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆகவே, கவர்னரின் செயல்பாடுகளுக்கு நேரெதிராக தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, அனைத்துக் கட்சியினரையும் தேனீர் விருந்துக்கு அழைத்திருந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆனால், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தன. அதன்படி தேனீர் விருந்தையும் புறக்கணித்து விட்டன. அதேசமயம், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் மகாக்கவி பாரதியார் சிலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, கவர்னர் மாளிகையைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்காகவும், தமிழுக்காகவும், பெண் உரிமைக்காகவும் போராடிய தலைவர்களின் சிலை திறக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கவர்னர் மாளிகையில் ஔவையார் மற்றும் திருவள்ளுவர் சிலை ஏற்கெனவே திறக்கப்பட்டிருந்தது. நிகழாண்டு பாரதியார் சிலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது. ஆனால், இந்த விழாவையும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து விட்டன. அதேசமயம், பா.ஜ.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இதுதான் தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழ் என்று முழங்கும் தி.மு.க. அண்கோ, தமிழ் மகாகவியான பாரதியாரின் சிலை திறப்பு விழாவை புறக்கணித்தது எந்த வகையில் நியாயம் என்று கொந்தளிக்கிறார்கள். மேலும், இதுதான் தி.மு.க.வின் தமிழ் பற்றா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.


Share it if you like it