ஐயப்பன் கோவிலுக்கு சென்ற கேரள மாநில ஆளுநருக்கு சன்னி பிரிவு இஸ்லாமிய தலைவர் அப்துல் ஹமீது பைசி இஸ்லாத்தை விட்டு வெளியேற கதவு திறந்து இருப்பதாக கூறியிருப்பது பெரும் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ. அரசுக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த சிலர் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை அதற்கு தடைவிதிக்க முடியாது என கல்லூரியின் நிர்வாகத்தின் சட்டத்திற்கு உட்படாமல் அராஜக செயலில் இறங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. அதிலும் குறிப்பாக, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஹிஜாப் சம்பவத்தை சர்ச்சைக்குறிய விவாதமாக மாற்றிய அடிப்படைவாதிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்து அவர்களின் மத்தியில் கடும் சர்ச்சையையும் கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
அந்த வகையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அண்மையில் சபரிமலை கோயிலுக்குச் சென்றுள்ளார். இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீது பைசி அம்பலக்கடவு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். “ஒரு முஸ்லீம் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, அவர்களின் ஆடைகளை அணிந்தால், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் என்பது ஒரு நிபந்தனை”. “இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒருவர் கேள்வி கேட்டால், அவர் மதத்தை விட்டு வெளியேறிவிடுவார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. ‘இஸ்லாத்தை விட்டு ஆரிப் முகமது வெளியேற கதவுகள் திறந்தே உள்ளது. ஆரிப் கான் முஸ்லிமல்லாதவர் அல்லது காஃபிர் ஆகிவிட்டார் என்று நான் சொல்லவில்லை. ஃபத்வாவை உச்சரிப்பது மார்க்க அறிஞர்கள்தான். நான் இஸ்லாத்தில் உள்ள சட்டங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் கோவிலுக்கு சென்ற கேரள ஆளுநர் இஸ்லாத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை வைப்பது. அவரின் மதவெறியை மேலோங்கி காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதம் என பிரிந்தது போதும் என பாடல் பாடும் தோழர்கள் இது குறித்து வாய் திறப்பார்களா என பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.