கவர்னரின் அதிகாரம்… கருணாநிதி வழக்கிலேயே சொல்லியாச்சாம்… அப்போ செந்தில்பாலாஜி கதி?!

கவர்னரின் அதிகாரம்… கருணாநிதி வழக்கிலேயே சொல்லியாச்சாம்… அப்போ செந்தில்பாலாஜி கதி?!

Share it if you like it

கவர்னரின் அதிகாரம் என்ன என்பது குறித்து கருணாநிதி வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அதன்படி, அமைச்சரை நியமிக்கும் கவர்னருக்கு அவரை டிஸ்மிஸ் செய்யவும் அதிகாரம் உண்டு என்கிற தகவல்தான் தமிழக அரசியலில் சூட்டை கிளப்பி இருக்கிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். ஆனால், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு ஆரம்பத்திலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென, செந்தில்பாலாஜியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் கவர்னர். ஆனால், அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதோடு, இதை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பாக, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப, பதிலுக்கு ஸ்டாலினும் அதிகாரம் இல்லை என்று கடிதம் அனுப்ப, தமிழக அரசியலில் செந்தில்பாலாஜி விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

இந்த சூழலில்தான், உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி உ.பி.ஸ்களை உச்சா போக வைத்திருக்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதாவது, 1971 முதல் 76 வரை தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து கோதுமை இறக்குமதி செய்ததில் 5 லட்சம் ரூபாய் ஆதாயம் அடைந்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணாநிதியின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதோடு, அரசு கருவூலத்திலிருந்து சம்பளம் பெருவதால், கருணாநிதியை பொது ஊழியர்தான் என்று அறிவித்ததோடு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநில முதலமைச்சரை கவர்னர்தான் நியமிக்கிறார். ஆகவே, நியமிக்கும் அதிகாரியான அவருக்கு நீக்குவதற்கும் உரிமை உண்டு என்று தெரிவித்திருக்கிறது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டு செந்தில்பாலாஜியை மட்டுமல்ல யாரை வேண்டுமானாலும் நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு, அமலாக்கத்துறை விசாரணையின்போது செந்தில்பாலாஜி உச்சா போனதுபோல், மேற்படி உத்தரவைக் கேட்டு உ.பி.ஸ்கள் உச்சா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நெட்டிசன்களும், பா.ஜ.க.வினரும் கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it