கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல.
நோயாளிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்றும், தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தெளிவான தரநிலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரவி அவர்களும் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டால் பக்க விளைவுகள் வரலாம். ஆனால் அதுவும் லட்சத்தில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் தான் வர வாய்ப்புண்டு என்று கூறினார். மேலும் நானே மூன்று முறை தடுப்பூசி போட்டு கொண்டேன். இவ்வாறு அந்த காணொளியில் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்ககேத்கர், கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்டின் பக்க விளைவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே எதிர்கொள்ளக்கூடும் என்று கூறியுள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறும் 10 லட்சத்தில் ஏழு முதல் எட்டு நபர்கள் மட்டுமே த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) எனப்படும் அரிய பக்க விளைவை அனுபவிக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர் என்று கங்காகேத்கர் கூறினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கொரோனா தடுப்பூசி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.