அன்று நடை… இன்று டூவீலர்…தொடரும் சோகம்!

அன்று நடை… இன்று டூவீலர்…தொடரும் சோகம்!

Share it if you like it

அதிக கட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ் 90 கி.மீ. தூரம் மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை.

ஆந்திர மாநிலம், ராஜம்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மலு. இவரின், 10 வயது மகன், சிறுநீரக கோளாறு காரணமாக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை திடீர் என மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, இறந்த மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸின் உதவியை நாடியுள்ளார். ஆனால், அவர்கள் அதிக கட்டணம் வேண்டும் என கூறியுள்ளனர். இதனால், கடும் கோபமடைந்த நரசிம்மலு சோகத்துடன் தனது மகனின் உடலை தோலில் சுமந்து கொண்டு நண்பரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் 90. கி. மீட்டர் தூரம் எடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதே போல, தெலுங்கானா மாநிலம் கமரெடி பகுதியை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர், அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவருடைய மனைவி நாகலக்ஷ்மிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருந்த அவரிடம் அங்கிருந்த ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் ரூபாய் 2500 பணம் கொடுத்து உதவியுள்ளார். இதனை தொடர்ந்து, தனது மனைவியின் உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்ல வாகனங்களின் உதவியை நாடியுள்ளார். கொரோனோ காரணமாக அப்பெண்மணி இறந்திருக்க கூடும் என யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இதனால், கடும் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி சுடுகாட்டிற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்ற காட்சியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இதேபோல, மற்றொரு சம்பவம் காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதிக காய்ச்சலால் காரணமாக சிறுமியின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமைடைந்த காரணத்தினால் திடீர் என அவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து, தனது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை கோரியுள்ளார். மற்றொரு சடலம் வரும் வரை காத்திருங்கள் என்று மருத்துவ மையத்தில் இருந்த பணியாளர்கள் அலட்சியத்துன் பதில் அளித்துள்ளனர். இதனால், கோவமடைந்த ஈஸ்வர் தாஸ் தனது மகளின் உடலைத் தோளில் சுமந்தவாறு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள தனது கிராமத்தை நோக்கி நடந்து சென்ற காணொளியை சமூக வலைத்தளங்களில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “அன்று நடை… இன்று டூவீலர்…தொடரும் சோகம்!

  1. It is shame on Telengana ruling government, the ambulance driver service should be terminated, and rigorous imprisonment for 1 year must be given.

Comments are closed.