ஜிஎஸ்டி குறித்து தி.மு.க-எம்பி மற்றும் நிதியமைச்சர் முரண்பட்ட கருத்து.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசலை, கொண்டு வருவோம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆட்சி அமைந்து 7 மாதங்களை கடந்த பின்பும் கூட, ஜிஎஸ்டி குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து தமிழக முதல்வர் ஏன்? அமைதி காத்து வருகிறார் என்பது யாரும் அறியாத மிகப் பெரிய மர்மமாக உள்ளது.
தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவராக உள்ள டி.ஆர்.பாலு அவர்கள் பிரபல ஊடகமான தந்தி டிவி-க்கு சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். அப்பொழுது ஜிஎஸ்டி அவசியம் வேண்டும் என்று தனது கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள் ஜிஎஸ்டிக்கு சமீபத்தில் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். டி.ஆர். பாலு மற்றும் நிதியமைச்சர் ஜிஎஸ்டி குறித்து முரண்பட்ட கருத்தை தெரிவித்து தமிழக மக்களை இன்று வரை குழப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து எல்லாம் கவலைப்படாமல் முதல்வர் எங்கே? போட்டோ ஷூட் நடத்தி கொண்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.