ஹோட்டலில் பசு இறைச்சி: சர்ஃப்ராஸ் முகமது கைது!

ஹோட்டலில் பசு இறைச்சி: சர்ஃப்ராஸ் முகமது கைது!

Share it if you like it

குஜராத்தில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பசு மாட்டின் இறைச்சி பரிமாறிய ஹோட்டல் உரிமையாளர் சர்ஃப்ராஸ் முகமது வசீர் கான் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரின் ஹோடி பங்களா பகுதியில் பிரபலமான ஒரு அசைவ உணவகம் இருக்கிறது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹிந்து அமைப்பினர் மேற்கண்ட உணவகம் மீது லால்கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட உணவகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, குளிர்சாதனப் பெட்டியில் 6 பைகளில் 60 கிலோ மாட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவரை வரவழைத்த போலீஸார், மாதிரியை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். எஃப்.எஸ்.எல். அறிக்கையில், 60 கிலோ மாட்டிறைச்சியில் 20 கிலோ பசுவின் இறைச்சி என்பதும், 40 கிலோ எருமையின் இறைச்சி என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, உணவக உரிமையாளர் சர்ஃபராஸ் முகமது வசீர் கான் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மேற்படி ஹோட்டலுக்கு மாட்டிறைச்சி வழங்கிய இறைச்சிக் கடைக்காரர் அன்சார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


Share it if you like it