பசு சாணம் அணுக்கதிர் வீச்சை தடுக்குமா? குஜராத் நீதிமன்றத் தீர்ப்பால் பரபரக்கும் விவாதம்!

பசு சாணம் அணுக்கதிர் வீச்சை தடுக்குமா? குஜராத் நீதிமன்றத் தீர்ப்பால் பரபரக்கும் விவாதம்!

Share it if you like it

பசுவின் சாணத்தை வீடுகளில் பூசினால் அணுக்கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாது என்பது அறிவியல் பூர்வமான உண்மை என்று குஜராத் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்த நிலையில், உண்மையிலேயே அணுக்கதிர் வீச்சை தடுக்குமா என்று பட்டிமன்றம் நடத்தாக குறையாக விவாதித்து வருகிறார்கள் உ.பி.ஸ் அண்கோ.

ஹிந்து மத கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள், கோயில்களில் நடத்தப்படும் பூஜை உள்ளிட்டவை அறிவியலோடு ஒத்துப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, பசுமாட்டின் சாணம், கோமியம் ஆகியவை ஹிந்துக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இதற்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் பசுவின் சாணத்தைக் கொண்டு வாசல் தெளிப்பது, வீடுகளை மொழுகுவது போன்றவற்றை செய்தனர். காரணம், அணுக்கதிர் வீச்சு தாக்காது என்பதுதான். அதேபோல, தீட்டு ஏற்பட்ட வீடுகளையும், வீட்டில் ஹோமம் போன்றவற்றை வளர்க்கும்போது பசுவின் கோமியத்தை வீடுகளில் தெளிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம், பசுவின் கோமியத்தை தெளிப்பதால் வீட்டில் இருக்கும் கிறுமிகள் அழியும் என்கிற அறிவியல்பூர்வமான உண்மைதான்.

இந்த நிலையில்தான், குஜராத் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, பசு மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும், இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக முகமது அமீன் என்கிற இஸ்லாமிய இளைஞரை குஜராத் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை குஜராத் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திரா, முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

அதேசமயம், இந்த வழக்கின் தீர்ப்பில் பசுக்களை பற்றி நீதிபதி சொல்லியிருக்கும் பல செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. அதாவது, “பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் எல்லா செல்வங்களும் இருக்கும். பசுக்கள் கவலையுடன் இருந்தால், அந்த இடத்தில் செல்வங்கள் அழிந்துவிடும். பசு வெறும் விலங்கு மட்டும் அல்ல, அது ஒரு தாய். அதில்தான் தேவர்கள் வாழ்கிறார்கள். எனவே, பசுவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம். மேலும், பசுவின் சாணத்தை வீடுகளில் பூசினால் அணுக்கதிர் வீச்சு பாதிப்பு தடுக்கப்படும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அதேபோல, பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். ஆகவே, என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் உலகத்தின் பிரச்னைககள் எல்லாம் தீரும். பசுவதையை முழுமையாக நிறுத்தும்வரை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பும் குறையாது” என்று கூறியிருக்கிறார்.

நீதிபதியின் இந்த பேச்சுதான் தற்போது பல்வேறு மாநிலங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்களும், திராவிட சிந்தனை கொண்டவர்களும், ஹிந்து மத விரோதிகளும் பசுவின் சாணத்தில் உண்மையிலேயே அணுக்கதிர் வீச்சை தடுக்கும் ஆற்றல் இருக்கிறதா? என்று பட்டிமன்றம் நடத்தாக குறையாக தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.


Share it if you like it