ஹர்தீப் சிங் விவகாரம் – நட்பு நாடுகளின் ஆதரவு கோரும் கனடா – நட்பு நாடுகள் கை விரித்த பரிதாபம்

ஹர்தீப் சிங் விவகாரம் – நட்பு நாடுகளின் ஆதரவு கோரும் கனடா – நட்பு நாடுகள் கை விரித்த பரிதாபம்

Share it if you like it

சமீபத்தில் கனடா நாட்டு குடியுரிமையுடன் வாழ்ந்து வந்த ஹர்திப் சிங் நிசார் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் மர்மமாக மரணித்தான். இரண்டு நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக கனடா நாட்டு போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது . இந்த ஹர்திப் சிங் நிசார் கடந்த காலங்களில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் மூலமாக பல்வேறு நாச வேலைகளை பின்புலமாக இருந்து செய்தவன் . வேளாண் திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் புதுடில்லி முற்றுகையிடவும் அதில் போராட்டம் கலவரம் வெடிக்கவும் பின்னணியில் இருந்தவன். விவசாய போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தியவன் . குடியரசு தின காலத்தில் செங்கோட்டையை முற்றுகையிட்டு தேசிய கொடியை அவமதித்த நிகழ்விற்கு பின்னணியில் இருந்தவன். இவை யாவும் இந்திய உளவுத்துறையின் மூலம் ஆதாரப்பூர்வமாக கனடா நாட்டு அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டும் அவன் மீது இன்றுவரை கனடா நாடு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்களால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதை முன் வைத்து பாரதத்தை சீண்டுகிறது.

தற்போது ஹர்தீப் சிங் நிசார் மரணத்தின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாகவும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டது கனடா நாட்டில் இந்திய தூதராக பணிபுரிந்த பவன் குமார் ராய் ஐபிஎஸ் என்ற ராஜீய அதிகாரி என்றும் வெளிப்படையாக கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியது. பவன் குமார் ராயை உடனடியாக கனடாவில் இருந்து வெளியேற்றியது. இந்த பவன்குமார் ராய் ஐபிஎஸ் பல ஆண்டுகள் உளவுத்துறையில் பணியாற்றியவர். அடிப்படையில் இவர் ஒரு உளவுத்துறை அதிகாரி என்பதும் கனடாவின் குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம். மேலும் உளவுத்துறை அதிகாரியாக பவன் குமார் அதிக அளவில் பணியாற்றியது பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட காலிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமான இடங்களில் தான் . அந்த வகையில் அவர் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் ஒவ்வொரு அசைவையும் அதன் பின்புலம் பொருளாதார மூலம் சர்வதேச தொடர்புகள் என்று அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அவர் தான் இந்த கொலையை பின்னணியில் இருந்து நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று கனடா குற்றம் சாட்டுகிறது.

கனடா நாட்டின் உள்நாட்டில் இந்திய உளவுத்துறை மூலம் ஒரு கொலை அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கனடா நாட்டில் பாரதம் அத்துமீறுவதாகவும் அதை கண்டிக்க வேண்டும் என்றும் தனது நாடுகளான பிரிட்டன் – அமெரிக்கா – ஆஸ்திரேலியா உள்ளிட்ட மூன்று நாடுகளிடமும் கனடா நாட்டு பிரதமர் வெளிப்படையாக கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க பிரிட்டன் – அமெரிக்கா – ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மறுப்பு தெரிவித்திருக்கிறது. கனடாவிற்கும் பாரதத்திற்கும் இடையிலான இந்த ராஜ்ய முருகலிலும் காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்திலும் எந்த விதமான கருத்தையும் முன்வைக்காமல் மூன்று நாடுகளும் மௌனம் காக்கிறது.

முழுமையாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிரிட்டன் நாட்டிற்கு அதன் பயங்கரவாத பிடியிலிருந்து மீண்டு வருவதற்கு மோடி என்னும் மாமனிதரின் முழு ஆதரவு தேவை. பிரிட்டனின் சீரழிந்த பொருளாதாரத்தை திவாலாகி வரும் பிரிட்டனின் நகரங்கள் என்று விழி பிதுங்கி நிற்கும் நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு பிரிட்டனில் இருக்கும் இந்திய வம்சாவழியினரின் பொருளாதாரப் பங்களிப்பும் அரசியல் ஆதரவும் கட்டாயம் தேவை . கனடாவின் கோரிக்கையை ஏற்று அதோடு கூட்டு சேர்ந்து பாரதத்தை அவமதிக்க துணிந்தால் அது பிரிட்டன் தான் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு சமமாக மாறிவிடும் . சுய அறிவும் தொலைநோக்குப் பார்வையும் உள்ள ரிஷி சுனக் போன்ற பிரிட்டன் பிரதமரும் இந்த தற்கொலை முயற்சியை எடுக்க மாட்டார். எப்படியாவது பிரட்டனை சீரழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்? என்ற பிரயத்தனம் செய்து வரும் பிரிட்டனின் அரசியல்வாதிகளோ அமைச்சர்களோ கூட நிச்சயம் கனடாவின் இந்த கருத்திற்கு உடன்பட மாட்டார்கள். அந்த வகையில் பிரிட்டனின் ஆதரவு கனடாவிற்கு இல்லை.

ஆஸ்திரேலியா நாட்டை பொறுத்த வரையில் அவர்களின் பெரும்பாலான உழைப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நுண்ணறிவு பிரிவுகளில் பெறும் பங்கு வகைப்பவர்கள் இந்தியர்களே. அவர்களின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தான் கொரோனாவை தாண்டி ஆஸ்திரேலியா நிமிர்ந்து நிற்க மூலகாரணம் . அதோடு இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஆஸ்திரேலியாவிலும் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாத நடவடிக்கைகள் அங்குள்ள இந்தியர்கள் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் உள்ளிட்டவை ஆஸ்திரேலிய மக்களிடம் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொது அமைதி அதிகம் விரும்பும் ஆஸ்திரேலியா மக்களுக்கு அவர்களது மண்ணில் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் வெறுப்பை தேடி கொடுத்திருக்கிறது.

அதோடு ஆஸ்திரேலியா நாட்டு மக்கள் முதல் அந்நாட்டின் ஆட்சியாளர்கள் வரையிலும் பாரதத்தின் நியாயத்தை உணர்ந்து நல்லெண்ணம் நம்பிக்கை அடிப்படையில் செயல்படும் பாரதத்தின் ஆட்சியாளர்களை பெரிதும் மதிக்கிறார்கள். உலக அளவில் இதுபோன்ற ஒரு நல்ல அரசு வல்லரசாக வளர்வதில் உலகிற்கு பெரும் நன்மைகள் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்ப்பவர்கள். அப்படிப்பட்ட பாரதத்தின் ஆட்சியாளர்களுக்கு எதிராக கனடா கொண்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு ஆஸ்திரேலியா ஒருநாளும் ஆதரவு கொடுக்காது. ஒரு வேளை பெயரளவிற்கு ஆஸ்திரேலியா கனடாவிற்கு ஆதரவு தர முயன்றால் கூட அந்நாட்டில் விளையாட்டு வீரர்கள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்புவார்கள். அதனால் ஆஸ்திரேலியா ஒருபோதும் கனடாவின் கருத்திற்கு உடன்படாது. பாரதத்திற்கு எதிராக கனடாவோடு கைகோர்க்காது.

கொரோனாவிற்கு பிறகு சிக்கலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வர வலுவான பொருளாதார கட்டமைப்பும் பெரிய அளவிலான பொருளாதார சந்தையும் மனித வளமும் அதிகம் கொண்ட பாரதத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் அமெரிக்காவிற்கு தேவை . அதோடு அமெரிக்காவின் ப்ரீமியம் விசா என்னும் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் இந்திய வம்சாவழியினரின் முதலீடும் அவர்களின் அரசியல் ஆதரவும் அமெரிக்காவிற்கு தேவை . எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெற்றிகரமாக எதிர் கொள்ளவும் . சீனாவின் தலையீடு சீனாவின் தலையிட்டால் அமெரிக்காவில் தலை தூக்கும் கம்யூனிஸ பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை தகர்த்து சர்வதேச அளவில் பலமான நாடாக தன்னை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு மோடி என்னும் உலகளாவிய ஒரு ஆளுமையின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அதனால் அமெரிக்கா எந்த நிலையிலும் கனடாவின் கருத்திற்கு உட்பட்டு பாரதத்தை எதிர்க்க துணியாது.

ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில் இந்திய உளவுத்துறையை சம்பந்தப்படுத்தி அதை மையமாக வைத்து பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத் துறையை கண்டித்து கூட்டறிக்கை விட வேண்டும் என்ற கனடாவின் கோரிக்கையை அமெரிக்கா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா நாடுகள் நிராகரித்துள்ளது . அதே நேரத்தில் கனடாவின் குடியுரிமை பெற்ற ஹர்திப் சிங் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பாரதத்தின் உளவுத்துறை சார்ந்து கருத்து தெரிவிக்கவும் இதை முன்வைத்து பாரதத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டணிக்கை விடுக்கவும் அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது

ஒருவேளை இன்று ஹர்திப் சிங் கொலை விவகாரத்தை வைத்து கனடா பாரதத்தை உலக அரங்கில் சீண்டி பார்க்க துணிவது போல் கனடாவிற்கு துணை கொடுத்து சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலியா பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் களம் இறங்கும் பட்சத்தில் பாரதத்தின் பதிலடியும் அதன் விளைவுகளும் அந்தந்த நாடுகளில் எப்படி எதிரொலிக்கும்? என்பதை மூன்று நாடுகளும் நன்கறியும். பாரதத்தின் மீது பொறாமையும் வன்மமும் இருந்தால் கூட தற்போதைய சூழலில் எந்த ஒரு ஆட்சியாளரும் பாரதத்தை ஹர்திப் சிங் கொலை விவகாரத்தை வைத்து வெளிப்படையாக எதிர்க்க துணிய மாட்டார்கள். அந்த வகையில் கனடாவிற்கு உதவியும் இல்லை. தனது தோழமை நாடுகளான பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு ஹர்திப் சிங் விவகாரத்தில் கிடைக்காது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணத்தை முன் வைத்து பாரதத்திற்கு எதிராக களம் காணும் கனடாவின் முயற்சி வெற்றி பெறாது.


Share it if you like it