வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது சிலை திறக்கப்பட்டது. இதனை ஆளுநர் ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, இளைஞர்கள் தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற வேண்டும்.
9 ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா தேசிய கல்வி கொள்கையை பெற்றிருக்கிறது. இக்கொள்கை முழு கல்வித்துறையிலும் சிறந்த மாற்றம் அடைய வைக்கும்.
பல்கலை கழகங்கள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 9 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் வட்டார மொழிகளில் மருத்துவம்,பொறியியல் படிக்க இயலும். இதன்மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வள்ளலார் காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். இவ்வுலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டார். அவரது போதனைகள் அனைவரின் வளர்ச்சிக்காகவும், நம்பிக்கைக்காகவும் அனைவரின் முயற்சியுடனும் கூடிய சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகும்.
மேலும் இன்று வள்ளலார் உயிருடன் இருந்திருந்தால் அனைத்து லோக்சபா ,சட்ட சபைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாராட்டியிருப்பார் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் பேசினார்.