இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கஜகஸ்தானில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கஜகஸ்தான் அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, மக்களின் பல்வேறு பிரிவுகளின் ஆதரவிற்கும் எதிர்ப்புக்கும் வழிவகுத்துள்ளது. அந்நாட்டின் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தடையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, பள்ளி சீருடைகள் எந்தவொரு மதக் கோட்பாட்டையும் ஊக்குவிக்கும் எந்தவொரு கூறுகளையும் அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
கர்நாடகாவில் தேர்வின் போது முஸ்லிம் பெண் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் உயர்கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்தி, “இது மதச்சார்பற்ற நாடு. மக்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்திக்கொள்ள சுதந்திரமாக இருக்கிறார்கள்”. இந்த முடிவு கடந்த ஆண்டிலிருந்து கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
, அரசானது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கஜகஸ்தானில், மதச்சார்பற்ற அரசை நிலைநிறுத்துவதற்காக , பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்துள்ளது.
ஆனால் இந்தியாவில், கர்நாடகாவில் பள்ளிகள்/கல்லூரிகளின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கியது.
ஆடைக் கட்டுப்பாடு மதச்சார்பற்றதா? இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.