ஹிந்துக்களை துச்சாதனர்களாக சித்தரித்து கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வரைந்திருக்கும் கார்ட்டூன், இரு பிரிவினரையே மோதலை தூண்டும் வகையில் இருப்பதாகக்கூறி, ஹிந்து முன்னணி அமைப்பினர் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அதேசமயம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை யாரும் அணியக்கூடாது என்று கோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது, கோர்ட் உத்தரவையும், பள்ளியின் சட்ட திட்டங்களையும், மாநில அரசின் உத்தரவையும் மதிக்காமல், வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா ஆகிய உடைகளை அணிந்து வந்தனர் அடிப்படைவாத மாணவிகள். அதேபோல, இன்று கல்லூரி திறக்கப்பட்டபோதும், கல்லூரிகளில் படிக்கும் அடிப்படைவாத மாணவிகளும், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே வந்தனர்.
நிலைமை இப்படி இருக்க, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சாமிநாதன் என்பவர், மகாபாரதத்தில் திரௌபதியின் சேலையை துரியோதனின் தம்பி துச்சாதனன் உருவதுபோல, ஹிந்துக்களை துச்சாதனனாக சித்தரித்து, இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை உருவுவதுபோல கார்டூன் வரைந்திருக்கிறார். இது குடியாத்தம் வாட்ஸ் ஆப் குழுக்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இக்கார்டூன், இஸ்லாமியர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் ஹிந்து அணைப்பினர். மேலும், பள்ளி நிர்வாகம், மாநில அரசு, நீதிமன்றம் ஆகியவை சம்மந்தப்பட்ட விவகாரத்தில், தேவையில்லாமல் ஹிந்துக்களை இழுத்துவிட்டிருப்பது அந்நியக் கைக்கூலிகளின் இழிச்செயல் என்று வசைபாடுகிறார்கள்.