எங்களுக்கு ஹிஜாப்தான் முக்கியம்: அடம் பிடிக்கும் அடிப்படைவாத மாணவிகள்!

எங்களுக்கு ஹிஜாப்தான் முக்கியம்: அடம் பிடிக்கும் அடிப்படைவாத மாணவிகள்!

Share it if you like it

எங்களுக்கு தேர்வை விட ஹிஜாப்தான் முக்கியம் என்று சொல்லி, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் தேர்வை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி பி.யூ. அரசுக் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், திடீரென சீருடைக்கு மேல் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என்று ஹிந்து மாணவிகள் போர்க்கொடி தூக்கினர். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, அரசின் உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் போராட்டம் நடத்தியதோடு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மேற்படி வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான உடைகளை மாணவ, மாணவிகள் அணியக்கூடாது என்று உத்தரவிட்டது நீதிமன்றம். மேலும், திங்கள்கிழமை முதல் பள்ளிகளை திறக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி, திங்கள்கிழமை 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கோர்ட் உத்தரவை மதிக்காமல் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். அம்மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க பள்ளி நிர்வாகம் மறுத்தது. இதனால், மாணவிகளின் பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பெற்றோருடன் ஆசிரயர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று திருப்புதல் தேர்வு தொடங்கியது. வழக்கம்போல அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே பள்ளிக்கு வந்தனர். ஆகவே, அம்மாணவிகளை ஹிஜாப் உள்ளிட்டவற்றை அகற்றி விட்டு தேர்வு எழுத வருமாறு ஆசிரியர்கள் கூறினர். ஆனால், எங்களுக்கு தேர்வைவிட ஹிஜாப்தான் முக்கியம் என்று கூறி, அடிப்படைவாத மாணவிகள் அடம் பிடித்தனர். எனவே, அந்த மாணவிகளை தனியாக ஒரு அறையில் அமரும்படி கூறியது பள்ளி நிர்வாகம். ஆனால், இதற்கும் அந்த அடிப்படைவாத மாணவிகள் மறுப்புத் தெரிவித்துவிட்டு, தேர்வையும் புறக்கணித்து விட்டனர்.

அதாவது, கோர்ட் உத்தரவையும் மதிக்க மாட்டோம், பள்ளி நிர்வாகத்தின் சட்ட திட்டங்ளையும் மதிக்க மாட்டோம் என்ற அடிப்படைவாத மாணவிகளின் இத்தகைய செயல்தான் கர்நாடகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it