ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? ஹிஜாப்பின் மறுபக்கம்: மறைக்கும் ஊடகங்கள்!

ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? ஹிஜாப்பின் மறுபக்கம்: மறைக்கும் ஊடகங்கள்!

Share it if you like it

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதற்கு ஹிஜாப் தேவையில்லை. ஆனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு மட்டும் ஹிஜாப் வேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் அடம்பிடிப்பதால் எங்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது என்று ஏழை மாணவிகள் வேதனைப்படுகிறார்கள். ஆனால், இச்செய்திகளை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன என்பதுதான் வேதனை!

கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ. அரசுக் கல்லூரியில் ஆரம்பித்த ஹிஜாப் விவகாரம் தற்போது அம்மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. இவ்வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை மாணவ, மாணவிகள் அணியக் கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டிருக்கிறு. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். இதற்கு, பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, ஆசிரியர் மற்றும் முதல்வர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அடிப்படைவாதிகள்.

இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகளால் தங்களின் படிப்பும் கெடுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ஏழை, எளிய மாணவிகள். ஆனால், இதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இதுகுறித்து தனியார் ஆன்லைன் சேனல் ஒன்று மாணவிகளிடம் நேரடியாக பேட்டி எடுத்திருக்கிறது. அப்போது, மாணவிகள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஒரு மாணவி பேசும்போது, “இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றுக்காக ஹிஜாப்பை அகற்றிவிட்டு வீடியோ எடுக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்போது மட்டும் ஹிஜாப் தேவைப்படுகிறது. அவர்களுக்கு கல்வி முக்கியம் என்றால், ஹிஜாப் இல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. வேண்டுமென்றே சண்டையிட விரும்புகிறார்கள். இதனால்தான், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இவர்களால் எங்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது” என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இதே கருத்தையே இன்னொரு மாணவியும் கூறியிருக்கிறார். அந்த மாணவி கூறுகையில், “நாங்கள் அனைவரும் குறைந்த வருமானம் கொண்ட ஏழை குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். எங்கள் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளிகள். அவர்கள் எங்களைப் பள்ளிக்கு அனுப்ப மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், இதுபோன்ற போராட்டங்களால் நாங்கள் படிப்பது பெரும் சவாலாக இருக்கிறது” என்று தனது குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜாமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதி அமைப்புகளின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், கோர்ட் உத்தரவைுயம், மாநில அரசு உத்தரவையும், கல்வி நிறுவனங்களின் சட்டதிட்டங்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


Share it if you like it