ஹிஜாப் சர்ச்சை ஒரு சதி… கேரள கவர்னர் ஆரிப் முகமது!

ஹிஜாப் சர்ச்சை ஒரு சதி… கேரள கவர்னர் ஆரிப் முகமது!

Share it if you like it

இஸ்லாத்தின் அவசியமான 5 விஷயங்களில் ஹிஜாப் இல்லை. ஆகவே, ஹிஜாப் சர்ச்சை திட்டமிட்ட சதி என்று கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆரிப் முகமது கான். இவர், சமீபத்தில் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான், கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாகி இருக்கும் ஹிஜாப் விவகாரம் ஒரு திட்டமிட்ட சதி என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஆரிப் முகமது கான், ‘இஸ்லாத்தில் அவசியமான 5 விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஹிஜாப் இல்லை. ஆகவே, ஹிஜாப் தொடர்பாக நடந்துவரும் சர்ச்சை, முஸ்லிம் பெண்களை பின்னுக்குத் தள்ளும் சதியே தவிர, வேறொன்றும் இல்லை. அதேபோல, மதத்துக்கும், கல்விக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. மதத்தின் நோக்கமும், கல்வியின் நோக்கமும் மனிதர்கள் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இப்படித்தான் முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், தற்போது முத்தலாக் தடைக்குப் பிறகு, முஸ்லிம் பெண்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இதேபோல, பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகளும் ஹிஜாப்புக்கு எதிராக கருத்துக்கூறி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘நாங்கள் மதச்சார்பற்ற கல்வியில் அக்கறையுடன் இருக்கிறோம். உதாரணமாக, மதரஸா போன்ற மதம் சார்ந்த கல்வி நிலையங்களில், இஸ்லாம் முறைப்படி ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்துதான் வரவேண்டும் என்று வற்புறுத்த முடியும். அதேபோல, ஹிந்துக்களின் மடம் சார்ந்த கல்வி நிலையங்களில் காவி உடை அணிந்துதான் வர வேண்டும் என்று கண்டிப்பு காட்ட முடியும். ஆனால், மதச் சார்பற்ற கல்வியை போதிக்கும் பள்ளி, கல்லூரிகளில் அக்கல்வி நிறுவனங்கள் வகுத்திருக்கும் நெறிமுறைகளின்படி சீருடை அணிந்துதான் வரவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதேகருத்தையே மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான சாமியர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் வலியுறுத்தி இருக்கிறார். ‘பாரம்பரிய ஹிந்து கல்வி நிறுவனங்களான குருகுலத்தில் சீடர்கள் பகவா எனப்படும் காவி உடையை அணிந்து வருவார்கள். ஆனால், ​அவர்கள் மற்ற பள்ளிகளுக்குச் செல்லும்போது ​அப்பள்ளியின் சீருடையை அணிந்து சென்று, கல்வி நிறுவனங்களின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அதேபோல, மதரஸாக்களில் நீங்கள் ஹிஜாப் அணிந்தாலும், கிஜாப் பூசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், பள்ளி, கல்லூரிகளின் அறிவையும், ஒழுக்கத்தையும் சிதைத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it